ETV Bharat / entertainment

சூர்யா நடிப்பு பயங்கரம், ஆனால் கதை தான் சொதப்பல்... ’கங்குவா’ பற்றி ஆடியன்ஸ் கூறியது என்ன? - KANGUVA FANS REVIEW

Kanguva fans review: சூர்யா, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ள ’கங்குவா’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படம் பற்றி ரசிகர்கள் கூறும் கருத்தை இந்த செய்தியில் காணலாம்.

கங்குவா திரைப்படம் குறித்து ரசிகர்கள் விமர்சனம்
கங்குவா திரைப்படம் குறித்து ரசிகர்கள் விமர்சனம் (Credits - @StudioGreen2 X Account, ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 14, 2024, 4:05 PM IST

சென்னை: ’கங்குவா’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள கங்குவா திரைப்படம் இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

சூர்யா நடிப்பில் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் கடைசியாக திரையரங்குகளில் வெளியானது. இதனையடுத்து இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கங்குவா பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இன்று காலை முதல் சூர்யா ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கங்குவா திரைப்படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை கூறியுள்ளனர்.

கங்குவா திரைப்படம் குறித்து ரசிகர்கள் விமர்சனம் (Credits - ETV Bharat Tamil Nadu)

கங்குவா படத்தின் முதல் காட்சி பார்த்த ரசிகர் பேசுகையில், “கங்குவா படம் ஒருமுறை பார்க்கலாம். இப்படம் ப்ளாக்பஸ்டர் ஆகும் என்றளவு படத்தில் ஒன்றும் இல்லை. சூர்யா, பாபி தியோல் நடிப்பு பயங்கரமாக இருந்தது. படத்திற்கு கொடுத்த ஹைப் அளவு இல்லை. கங்குவா கதை நன்றாக உள்ளது. ஆனால் திரைக்கதை பெரிதாக இல்லை” என கூறினார்.

இதனைத்தொடர்ந்து பேசிய சூர்யா ரசிகர், "சூர்யா டபுள் ஆக்‌ஷன் என்பதால் டபுள் ட்ரீட்டாக உள்ளது. இசை கலக்கலாக உள்ளது. கங்குவா முதல் பாதி கொஞ்சம் சொதப்பல், இரண்டாம் பாதி ஓகே ரகம் தான்" என்றார். மற்றொரு ரசிகர் பேசுகையில், “கங்குவா திரைப்படம் வேற லெவல். சூர்யா நடித்த திரைப்படம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வருகிறது. படத்தில் சூர்யா நடிப்பு, ஆக்‌ஷன் எல்லாம் வேற லெவலில் உள்ளது. குடும்பத்துடன் பார்க்கலாம்” என்றார்.

கங்குவா படம் பார்த்த மற்றொரு ரசிகை பேசுகையில், “படம் கண்டிப்பாக ஓடும். இயக்குநர் சிவா இவ்வளவு படம் எடுத்ததில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் கங்குவா திரைப்படம் எடுத்ததில் அண்ணாமலை கிரிவல பக்தராக சொல்கிறேன், இந்த படம் கண்டிப்பாக ஹிட். சூர்யா இந்த படத்திற்கு உழைத்தது போல் வேறு எந்த நடிகரும் உழைத்ததில்லை. இந்த படத்திற்கு நெகடிவ் விமர்சனம் போடுபவர் எவரும் பச்சை தமிழன் இல்லை” என கூறியுள்ளார்.

சூர்யா ரசிகர் ஒருவர் பேசுகையில், “ஒரு முறை பார்க்கலாம். ஆனால் சூர்யா ரசிகராக, அவரது கடின உழைப்புக்காக இப்படம் ப்ளாக்பஸ்டர் ஆக வேண்டும். சூர்யா தவிர வேறு எவரும் இது போன்று நடிக்க முடியாது. லாஜிக் இல்லாமல் ஃபேண்டஸியாக பார்த்தால் இப்படம் பிடிக்கும். கதை, திரைக்கதை பெரிய அளவில் இல்லை” என்றார்.

இதையும் படிங்க: ’அமரன்’ கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்!

இதனைத்தொடர்ந்து கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த அளவு இல்லை என ஒரு ரசிகர் கூறியுள்ளார். அவர் பேசுகையில், “எனக்கு கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த அளவு இல்லை. இப்படத்திற்கு பார்ட் 2 தேவை இல்லை. படத்தில் சூர்யா நன்றாக நடித்திருந்தாலும், கதை பெரிய அளவில் இல்லை. டிரெய்லர் கொடுத்த ஹைப் படத்தில் இல்லை” என்றார்.

பின்னர் பேசிய சூர்யா ரசிகர் ஒருவர், “படத்தில் முதலையுடன் சண்டையிடும் காட்சி, கத்தியை தூக்கி எறியும் காட்சி அதெல்லாம் நன்றாக உள்ளது. சூர்யாவின் குடும்பத்தினர் ஒருவர் நடித்துள்ளார். அந்த ட்விஸ்டை கூற விரும்பவில்லை. கிளைமாக்ஸ் சண்டை வேற லெவலில் இருக்கும். சூர்யா ரசிகர்களுக்கு இப்படம் ட்ரீட்டாக இருக்கும்” என்றார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.