- " class="align-text-top noRightClick twitterSection" data="">
சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் யூ.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் கங்குவா படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. பெரும் பொருட்செலவில் தயாராகி வரும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.
மேலும், இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரீயட் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கங்குவா பட டீசர் இன்று வெளியாகியுள்ளது.
ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகள், போர் என அதிரடியான பிரமாண்ட காட்சிகள் டீசரில் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி ,சூர்யா, பாபி தியோல் ஆகியோரின் காஸ்டியூம்கள் மிரட்டலான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஃபேண்டஸி கதையாக உருவாகியுள்ள கங்குவா படத்தில், சூர்யா இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கங்குவா படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையில், கோடை விடுமுறையில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கேரளாவில் அலைமோதிய ரசிகர்கள்.. விஜயின் கார் சேதம்!