ETV Bharat / entertainment

அரண்மனை 4 ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போது? எதில்? - Aranmanai 4 OTT Release date - ARANMANAI 4 OTT RELEASE DATE

Aranmanai 4 OTT: இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த மே 3ஆம் தேதி ரிலீசான அரண்மனை 4 திரைப்படம் வரும் ஜூன் 21ஆம் தேதி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரண்மனை 4 போஸ்டர் புகைப்படம்
அரண்மனை 4 போஸ்டர் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 8, 2024, 3:44 PM IST

சென்னை: இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை, அரண்மனை 2, அரண்மனை 3 ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து உருவாக்கிய அரண்மனை 4 படம், கடந்த 3ஆம் தேதி ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

திகில் - திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில், இயக்குநர் சுந்தர்.சி நாயகனாக நடிக்க, இவருடன் இணைந்து தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு, சந்தோஷ் பிரதாப், கோவை சரளா, விடிவி கணேஷ் என தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தயாரிப்பு: அரண்மனை 4 திரைப்படத்தினை இயக்குநர் சுந்தர் சி, அவ்னி சினிமேக்ஸ் (Avni Cinemax (P) Ltd) சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் பென்ஸ்ஸ் மீடியா நிறுவனம் (Benz Media PVT LTD) சார்பில் அருண்குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தினை, ஏசியன் சுரேஷ் என்டர்டைன்மெண்ட் (Asian Suresh Entertainment ) நிறுவனம் விநியோகம் செய்துள்ளது.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா இசைக்குழு சார்பில், நடிகர் ஆதி இசையமைத்துள்ளார். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கு எடிட்டிங் பணிகளை ஃபெனி ஆலிவர் மற்றும் சண்டைக் காட்சிகளை ராஜசேகர் செய்துள்ளனர்.

அரண்மனை 4 ரிலீஸ்: கடந்த மே 3ஆம் தேதி ரிலீசான அரண்மனை 4 திரைப்படம், தமிழ் சினிமாவில் 2024ஆம் ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர் திரைப்படமாக வெற்றி பெற்றுள்ளது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான அரண்மனை 4, திகில் - நகைச்சுவை என திரைக்கதையில் வெரைட்டி காட்டி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

100 கோடி வசூல்: இப்படம் வெளியாகி மக்களிடையில் நல்ல வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றது.‌ கடந்த மாதம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியான இப்படம், இதுவரை ரூ.100 கோடி கடந்து வசூலில் சாதனை படைத்துள்ளது.

ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு: இந்த நிலையில், அரண்மனை 4 வரும் ஜூன் 21ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஓடிடியிலும் இப்படம் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சம்பளம் அதிகமாக கிடைப்பதால் பல தயாரிப்பாளர்கள் ஹீரோ ஆகிவிட்டனர்: தனஞ்செயன் - Producer dhananjayan

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.