ETV Bharat / entertainment

“இப்படி ஒரு கதையா?” - வெற்றிமாறனிடம் பிரமித்த ராகவா லாரன்ஸ்! - Raghava Lawrence in Adhigaram - RAGHAVA LAWRENCE IN ADHIGARAM

Adhigaram: நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்குநர் வெற்றிமாறன் கதையில் உருவாகி இருக்கும் 'அதிகாரம்' படத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தை ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.கதிரேசன் தயாரிக்க இருக்கிறார் என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Adhigaram
Adhigaram
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 21, 2024, 9:39 PM IST

சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன், ஆடுகளம் படங்களை ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.கதிரேசன் தயாரித்தார். இதில், ஆடுகளம் படம் ஆறு தேசிய விருதுகள் உள்பட ஏராளமான விருதுகளைப் பெற்றது. அதேபோல், கிராஸ் ரூட் ஃப்லிம் கம்பெனி சார்பில் காக்கா முட்டை, விசாரணை, வட சென்னை உள்ளிட்டப் படங்களை இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்தார்.

அந்த வகையில், ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸும் - கிராஸ் ரூட் ஃப்லிம் கம்பெனியும் இணைந்து 'அதிகாரம்' என்ற படத்தை தயாரிக்க இருப்பதாக கடந்தாண்டு அறிவிப்பு வெளியானது. இப்படத்திற்கு வெற்றிமாறன் கதை, திரைக்கதை, வசனம் எழுத, இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.

இப்படம் மூலம் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் எஸ்.கதிரேசன் - வெற்றிமாறன் இருவரும் சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளனர். பான் இந்தியா படமாக தயாராகும் இப்படத்தில், ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிப்பதாக தெரிவித்தனர். கடந்தாண்டு அறிவிப்பு வெளியானாலும், அதன்பிறகு இதுகுறித்து எந்தவித தகவலும் இல்லை.

இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் இந்த படம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "அதிகாரம் படத்தின் திரைக்கதையை கேட்டு பிரமித்துப் போனேன். வெற்றிமாறன் எழுதியுள்ள பிரமாண்ட கதையில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சியாகவும், ஆர்வமாகவும் உள்ளேன்.

ஏற்கனவே அறிவித்த இரண்டு படத்திற்கு பிறகு, இப்படத்தின் பணிகளைத் தொடங்குவதற்கு காத்திருக்க முடியவில்லை. இந்த அருமையான கதையை எனக்கு அளித்த வெற்றிமாறனுக்கு நன்றி. தயாரிப்பாளர் கதிரேசனுக்கு நன்றி. அனைவரது ஆசிர்வாதமும் வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கும் 'பென்ஸ்' திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது. அதன்பின்னர், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கும் 'ஹண்டர்' படத்தின் அறிவிப்பும் வெளியானது. தற்போது, இந்த இரண்டு படங்களுக்கும் முன்னதாக அதிகாரம் படத்தில் நடிக்க இருப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: D.I.S.C.O.. தலைவர் 171 படத்தின் டைட்டில் இதுவா? - லோகேஷ் வைத்த லாக்! - Thalaivar 171 Title Teaser

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.