ETV Bharat / entertainment

தளபதி 69; விஜய்க்கு ஜோடியாகிறாரா நடிகை சமந்தா? - Vijay Samantha - VIJAY SAMANTHA

Thalapathy 69: தளபதி 69 படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்கப் போவதாகவும், விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

விஜய், சமந்தா புகைப்படம்
விஜய், சமந்தா புகைப்படம் (Credits - Vijay and samantha X Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 2, 2024, 4:41 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் விஜய். இவர் தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், தி கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் செப் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கோட் படத்திலிருந்து கடந்த ஜூன் 22ஆம் தேதி ‘சின்ன சின்ன கண்கள்’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும், விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். இந்த கட்சிக்கு ஆட்சேபனைகள் கேட்டு தேர்தல் ஆணையம் கடந்த மாதம் செய்தித்தாளில் வெளியிட்டது. ஆனால், ஆட்சேபனைகள் ஏதும் வரவில்லை.

வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை இலக்காக கொண்டு செயல்படப் போவதாக ஏற்கனவே விஜய் அறிவித்திருந்தார். மேலும், ஒப்பந்தமாகி இருக்கும் படங்களை முடித்து விட்டு முழு நேர அரசியல் பணியில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது ’தளபதி 69’ படம் பற்றிய தகவல்கள் சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீ போல பரவி வருகின்றன.

அந்த வகையில், தளபதி 69 படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்கப் போவதாகவும், இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க இருப்பதாகவும், இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், விஜய் தரப்பிலிருந்தோ அல்லது படக்குழு தரப்பிலிருந்தோ அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, நடிகர் விஜய் - சமந்தா காம்போ தெறி படத்தில் நன்றாக ஒர்க் அவுட் ஆகிய நிலையில், தற்போது தளபதி 69 படத்திலும் அந்த காம்போ எதிர்பார்க்கலாமா என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், இயக்குநர் எச்.வினோத் நடிகர் அஜித் குமாரை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு உள்ளிட்ட 3 படங்களை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், எச்.வினோத் ஏற்கனவே நடிகர் கமல்ஹாசனுக்கு கதை சொல்லி ஒகே வாங்கி இருந்தார். அப்படத்திற்கு இசையமைப்பாளார் அனிருத் இசையமைக்க இருந்த நிலையில், தற்போது அந்த படம் டிராப் ஆனதால், அக்கதையை நடிகர் விஜய்யிடம் சொல்லி ஒகே வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: "பால்வெளி பாதை மேலே மேகமாய் உலவலாமே.." 'இந்தியன் 2' காலண்டர் பாடல் வெளியானது! - indian 2 calendar song released

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.