ETV Bharat / entertainment

நடிகர் விஜய்யுடன் ஜோடி சேருகிறாரா பிரேமலு புகழ் மமிதா பைஜூ? - Mamitha baiju - MAMITHA BAIJU

Mamitha baiju in 'Thalapathy 69': நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை எச்.வினோத் இயக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், அந்த படத்தில் நடிகை மமிதா பைஜூ நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய், மமிதா பைஜூ புகைப்படம்
விஜய், மமிதா பைஜூ புகைப்படம் (Credits - TVK ITwing, @MamithaBaiju_ 'X' page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 5, 2024, 1:20 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களின் ஒருவரான விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் கோட் படத்தில் மூன்று பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், இம்மாதம் மூன்றாவது வாரத்தில் டிரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 'தளபதி 69' என கூறப்படும் நடிகர் விஜய் நடிக்கும் அவரது அடுத்த படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அதே நேரத்தில் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, வரும் சட்டமன்ற தேர்தலில் களம் காணவுள்ள நிலையில், அடுத்த படம் தனது திரை வாழ்வில் கடைசி படமாக இருக்கும் என அறிவித்துள்ளார். இதனைத்தொடந்து விஜய்யின் 69வது படம் அரசியல் தொடர்பான கதையை மையப்படுத்தி இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரபல மலையாள நடிகை மமிதா பைஜூ விஜய்யின் 69வது படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மமிதா பைஜூ மலையாளத்தில் வெளியான ‘பிரேமலு’ படத்தின் மூலம் அனைத்து மொழி ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். இளசுகளின் மனதை கவர்ந்த மமிதா பைஜு தமிழில் கடைசியாக ஜீவி பிரகாஷுடன் ரிபெல் படத்தில் நடித்தார். தற்போது நடிகர் அதர்வா படத்திலும், விஷ்ணு விஷால் படத்திலும் நடித்து வருகிறார். இதனைத்தொடர்ந்து விஜய்யுடன் மமிதா பைஜூ நடிப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: 'மழை பிடிக்காத மனிதன்' படத்திலிருந்து ஒரு நிமிட காட்சி நீக்கம்.. இயக்குநர் விஜய் மில்டன் புகார் எதிரொலியால் நடவடிக்கை! - Mazhai pidikkadha manithan

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.