ETV Bharat / entertainment

இயக்குநர் சிவா பிறந்தநாளன்று வெளியாகும் ’கங்குவா’ டிரெய்லர்? - kanguva trailer - KANGUVA TRAILER

Kanguva trailer: சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ’கங்குவா’ படத்தின் டிரெய்லர் வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

கங்குவா போஸ்டர்
கங்குவா போஸ்டர் (Credits - studio green productions)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 9, 2024, 4:23 PM IST

சென்னை: ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா படானி, நடராஜன் சுப்ரமணியன், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகிறது. சிவா இயக்கத்தில் படப்பிடிப்பு பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. சிவா தன்னுடைய குடும்ப சென்டிமென்ட் கதையில் இருந்து விலகி ஃபேண்டஸி ஜானரில் இந்த படத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படும் நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முதல் பாடல் 'ஆதி நெருப்பே, ஆறாத நெருப்பே' பாடல் வெளியானது. தேவி ஸ்ரீ பிரசாத் கங்குவா படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், முதல் சிங்கிள் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த 'ஏழாம் அறிவு' படத்திற்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் கங்குவா படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் சூர்யா நடித்து கடைசியாக 2022ஆம் ஆண்டில் 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் வெளியானது. அதன்பின் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ’கங்குவா’ வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. ’கங்குவா’ படம் அறிவிப்பு வெளியானது முதல் எந்தவித ஆரவாரமும் இன்றி படப்பிடிப்பு நடத்தி முடித்துள்ள படக்குழு, படம் வெளியாக இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், ப்ரமோஷனில் இறங்கியுள்ளது. வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி இயக்குநர் சிவா பிறந்தநாளன்று கங்குவா திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இது நடிகர் சூர்யா ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: விடாமுயற்சியா? குட் பேட் அக்லியா? இன்னும் சற்று நேரத்தில் வெளியாகவுள்ள அப்டேட்.. அஜித் ரசிகர்கள் குஷி - vidaamuyarchi update

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.