சென்னை: ஷங்கர் இயக்கியுள்ள ’கேம் சேஞ்சர்’ (Game changer) படத்தின் டிரெய்லர் புத்தாண்டு அன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தில் ராஜூ தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’ (Game changer).
தமன் இசையமைத்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகிறது. தமிழில் பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். கேம் சேஞ்சர் படத்தின் ரா மச்சா மச்சா, DHOP ஆகிய பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு கல்லூரி மாணவன் சமூகத்தில் உள்ள பிரச்சனைகளை கையாண்டு எவ்வாறு பெரும் அரசியல்வாதியாக உருவெடுக்கிறார் என்பதே கேம் சேஞ்சர் படத்தில் கதை.
#GameChanger - Ramcharan as Student - IPS - IAS - Chief Election Officer - Politician in the film..✌️ Film releasing on Jan 10..⭐ pic.twitter.com/n10iHUbG1C
— Laxmi Kanth (@iammoviebuff007) December 30, 2024
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, வில்லன் கதாபாத்திரத்தில் அரசியல்வாதியாக மிரட்டியுள்ளார். முன்னதாக எஸ்.ஜே.சூர்யா இந்த வருடம் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'இந்தியன் 2' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இந்தியன் 3 திரைப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விஜய் வந்தால் நான் ஏன் எழுந்து நிற்க வேண்டும்?... சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் பாலா! - DIRECTOR BALA ABOUT VIJAY
இந்நிலையில் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் டிரெய்லர் புத்தாண்டு தின ஸ்பெஷலாக வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ராம் சரண் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் பொங்கல் பண்டிகைக்கு அஜித் நடித்துள்ள ’விடாமுயற்சி’, பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ’வணங்கான்’ ஆகிய திரைப்படங்கள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.