ETV Bharat / entertainment

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 இல் நாங்களா!- சிவாங்கி, எம்.எஸ்.பாஸ்கர் கூறியது என்ன? - BIGG BOSS TAMIL 8 - BIGG BOSS TAMIL 8

big boss season 8 participants: 'பிக்பாஸ் சீசன் 8' இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்கவுள்ள நிலையில், அதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்து பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், சிவாங்கி புகைப்படம்
நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், சிவாங்கி புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 9, 2024, 6:06 PM IST

Updated : Aug 9, 2024, 7:53 PM IST

சென்னை: விஜய் டிவியில் கடந்த 7 சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். பிரபலங்கள் ஒரே வீட்டில் 100 நாட்கள் இருக்க வேண்டும்.‌ அவர்களுக்குள் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு இறுதியில் ஒரு போட்டியாளர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். மேலும் செல்போன் , டிவி உள்ளிட்ட எந்தவித வெளியுலக தொடர்பும் இல்லாமல் 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு வார முடிவிலும் மக்கள் ஓட்டெடுப்பின் அடிப்படையில் ஒருவர் வெளியேற்றப்படுவார். நடிகர்கள் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமடைய வேண்டும் என இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பம் தெரிவிப்பதுண்டு. ஆனால் சில சமயங்களில் அந்த முடிவு அவர்களுக்கே பாதகமாக சென்று முடியும். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஓவியா, ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலர் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமடைந்துள்ளனர்.

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்தாண்டு 8வது சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து இந்த சீசனை யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சிம்பு, விஜய் சேதுபதி, சூர்யா, சரத்குமார் ஆகியோர் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.

அதேபோல் இந்த பிக்பாஸ் சீசனில் கலந்துகொள்ள போகும் போட்டியாளர்கள் குறித்தும், பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் எம்எஸ் பாஸ்கர், மாகாபா ஆனந்த், சிவாங்கி, டிடிஎப் வாசன், ஜோயா, சோனியா அகர்வால், நடன இயக்குநர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் பெயர்கள் அடிபடுகின்றன. இதுகுறித்து நடிகர் எம்எஸ் பாஸ்கர் தரப்பிடம் நமது ஈடிவி பாரத் செய்தியாளர் தொடர்பு கொண்டு விசாரித்த போது, "அவர் நிச்சயம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டார்" என தெரிவித்தனர்.

அதேபோல் சிவாங்கியை தொடர்பு கொண்டு கேட்ட போது, நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை, உங்களுக்கு யார் இவ்வாறு தவறான தகவலை பரப்பினார்கள்" என கேள்வி எழுப்பினார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்களுக்கு முன்னதாக தகவலை வெளியில் தெரிவிக்கக் கூடாது என தொலைக்காட்சி நிறுவனம் ஒப்பந்தம் செய்துவிடுவார்கள் எனவும், அதனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை போட்டியாளர்கள் எவரும் அதுகுறித்து பேசமாட்டார்கள் எனவும் கூறப்படுகிறது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: 'அந்தகன்' திரைப்படம் ரிலீஸ்: ரசிகர்களுடன் படம் பார்த்த நடிகர்கள் பிரசாந்த், சிம்ரன்! - Andhagan release

Last Updated : Aug 9, 2024, 7:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.