ETV Bharat / entertainment

சோனியா அகர்வால் நடிக்கும் 7ஜி - ரிலீஸ் தேதி அறிவிப்பு! - Sonia Agarwal movie 7G release date - SONIA AGARWAL MOVIE 7G RELEASE DATE

Sonia Agarwal New movie 7G: இயக்குநர் ஹாரூன் இயக்கத்தில் சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில் ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் படம் 7G. இந்த படம் ஜீலை 5ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுச் சார்பில் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

7G படப்பிடிப்பில் சோனியா அகர்வால்
7G படப்பிடிப்பில் சோனியா அகர்வால் (PHOTO CREDITS- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 23, 2024, 9:52 PM IST

சென்னை: இயக்குநர் ஹாரூன் தயாரித்து, எழுதி, இயக்கம் செய்யும் திரைப்படம் 7G. இந்த படத்தில் சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட், சித்தார்த் விபின், சினேகா குப்தா, சுப்ரமணியம் சிவா, கல்கி ராஜா, ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சித்தார்த் விபின் படத்திற்கு இசையமைக்க, கண்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பிஜு வி டான் பாஸ்கோ எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார். ஃபயர் கார்த்திக் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைத்துள்ளார். இந்த படத்தின் காட்சிகள், சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ட்ரீம் ஹவுஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், இப்படம் வரும் ஜூலை 5 ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது என ஒரு அதிரடியான போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது. ஹாரர் என்றாலே காமெடி என்றாகிவிட்ட தமிழ் சினிமாவின் விதிகளை உடைத்து, ஒரு முழுமையான திரில் அனுபவம் தரும் வகையில், பிளாக் மேஜிக்கை வைத்து, ஒரு ஃபீல் குட் ஹாரர் படமாக இந்த படம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த படத்தின் கதைக்களம், தனக்கென சொந்தமாக புதிய வீட்டை வாங்கி குடியேறும் இளம்பெண் அந்த வீட்டில் சில அமானுஷ்யங்களை உணர்கிறாள், அந்த அமானுஷ்யங்களுக்குப் பின்னால் பிளாக் மேஜிக் இருப்பதை அறியும் அவள், அதன் பின்னால் இருக்கும் உண்மைகளைத் தேட, பல எதிர்பாராத முடிச்சுகள் அவிழ்கின்றன.

ரசிகர்களை இருக்கை நுனியில் வைக்கும் வகையில், சுவாரசியமும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாத திரைக்கதையுடன், அனைவரும் ரசிக்கும் வைக்கும் வகையில் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடைசியாக இயக்குனர் ஹாரூன் இயக்கத்தில் நட்டி- ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் வெளியான திரைபடம் ’வெப்’ என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'கோட்' படத்தின் 2வது சிங்கிள் 'சின்ன சின்ன கண்கள்' பாடல் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.