ETV Bharat / entertainment

SK21 படத்திற்கு "அமரன்" என பெயர்! சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு டைட்டில் டீசர் வெளியீடு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 16, 2024, 8:16 PM IST

Sivakarthikeyan Amaran Movie: நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகியுள்ள சிவகார்த்திகேயனின் 21வது படத்தின் டைடில் டீசர் வெளியாகியுள்ளது.

எஸ்கே21
எஸ்கே21

சென்னை: கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நடித்து வரும் எஸ்கே21 படத்திற்கு 'அமரன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும், சிவாகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு டைடில் டீசரை கமல்ஹாசன் இன்று வெளியிட்டு உள்ளார்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

சிவகார்த்திகேயன் நடித்து வரும் #SK21 படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை, ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். மேலும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். சிவகார்த்திகேயன் படத்துக்கு ஜி.வி‌.பிரகாஷ்குமார் இசை அமைப்பது இதுவே முதல்முறை.

இப்படத்தில் நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடித்து வருகிறார். தமிழகத்தை சேர்ந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜனின் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

டீசர் எப்படி இருக்கு?: காஷ்மீரில் நடக்கும் பயங்கரவாதம் போன்ற கதை களத்துடன் துப்பாக்கி சூடு, தாக்குதல் என இந்திய ராணுவம் எதிர்கொள்வதை டீசர் விவரிக்கிறது. ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயனின் உடல் அமைப்பு கவனிக்க கூடியதாக அமைந்துள்ளது. தற்போது டீசர் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு திடீர் சிக்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.