சென்னை: போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடித்துள்ள 'சார்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் விமல் உள்ளிட்ட படக்குழுவினர் உடன் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் கலந்து கொண்டார்.
அப்போது மேடையில் பேசிய விஜய் சேதுபதி, “விமல் ஒரு நல்ல நடிகர். நான் அவரை கூத்துப் பட்டறையில் இருந்து பார்த்து வருகிறேன். நான் அவரது ரசிகன். இந்த படம் அவருக்கு மிகப் பெரிய கம்பேக் ஆக இருக்கும். போஸ் வெங்கட் தன்னை தயார்படுத்திக் கொண்டே இருக்கிறார். அவரது அரசியல் எதிர்காலத்தையும் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன். இப்படத்தில் வசனங்கள் தெளிவாக உள்ளது.
இதையடுத்து நடிகர் சரவணனின் நடிப்பு குறித்து விஜய் சேதுபதி பேசுகையில் நடிகர் சரவணன் விஜய் சேதுபதி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். அப்போது பெரிய மனிதன் போல நடந்துக்கோங்க என்று சரவணனை விஜய் சேதுபதி கலாய்த்தார். இதனைத் தொடர்ந்து பேசிய விஜய் சேதுபதி ’சார்’ படத்தின் கிளைமாக்ஸ் திருப்தியாக இருந்தது என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய வெற்றிமாறன், “படம் நன்றாக இருந்தால் எல்லோரிடமும் போய் சேரும். எனக்கு ஏற்புடைய படத்தில் எனது பெயர் இருந்தால் எனக்கு சந்தோஷம். இப்படத்தில் எனது பெயரை பயன்படுத்திக்க மட்டுமே சொன்னேன். மீதி எல்லாம் படக்குழுவினர் தான் செய்தனர்.
இதையும் படிங்க: "தமிழில் எனக்கு பிடித்த இயக்குநர் இவர் தான்" - சென்னையில் ஜூனியர் என்டிஆர் ஓபன் டாக்!
எதுவுமே செய்யாத எனக்கு இவ்வளவு அங்கீகாரம் கொடுத்ததற்கு நன்றி. இந்த படத்துக்கு ‘சார்’ என்ற தலைப்பு ரொம்ப பொருத்தமாக உள்ளது. இது ஒரு ஆசிரியரின் கமிட்மென்ட் பற்றிய கதை. இன்றைய சூழலில் அரசு பள்ளி ஆசிரியர் பற்றிய படம்தான் ‘சார்’.
அவர்களின் சவால்கள் பற்றிய படம். இன்றைய சூழலில் தமிழ் சொல்லிக்கொடுத்து அரசுப் பள்ளிகள் இயங்குவதில் உள்ள சவால்களை உணரக் கூடியதாக இருக்கும். இந்த படம் இன்றைய சூழலில் நாம் ஏதோ ஒன்றை விவாதித்து அதனை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.