சென்னை : தமிழ் சினிமாவின் நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு காலமானார். இவரது மறைவு ஒட்டுமொத்த மக்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவரது மூத்த மகன் விஜய பிரபாகரன் அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில், இளைய மகன் சண்முக பாண்டியன் தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் முதல் படமாக ‘சகாப்தம்’ என்ற திரைப்படம் வெளியானது.
பின்னர், மதுரை வீரன் என்ற படத்தில் நடித்தார். அதன்பின், விஜயகாந்துடன் ‘தமிழன் என்று சொல்’ படத்தில் நடித்து வந்தார். ஆனால், அப்படம் தேர்தல், விஜயகாந்த் மறைவு ஆகிய காரணத்தால் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.
Shanmugapandian’s#PadaiThalaivan Trailer!
— Christopher Kanagaraj (@Chrissuccess) December 13, 2024
🔗 https://t.co/KcsvqY4qMs
A blend of excitement, adventure, bonding & loaded action 🐘
An Isaignani Ilaiyaraaja Musical
Direction - Anbu pic.twitter.com/SLiWRx0nZi
இதையும் படிங்க : நடிகர் விஜயகாந்த் மகன் நடிக்கும் 'படைத் தலைவன்' படத்தின் முதல் பாடல் வெளியானது!
இந்த நிலையில், தற்போது இயக்குநர் அன்பு இயக்கத்தில், இசைஞானி இளையராஜாவின் இசையில் 'படைத்தலைவன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் செப்டம்பரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் பணிகள் முடியாததால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. ட்ரெய்லரின் தொடக்கத்தில், 'இங்க அடிச்சா அங்க வலிக்கும்' என்ற டயலாக்குடன் ட்ரெய்லர் தொடங்குகிறது. யானையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் 'பொன்மனச் செல்வன்' படத்தில் வரும் ’நீ பொட்டு வச்ச தங்க குடம்’ என்ற பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஏஐ மூலம் விஜயகாந்த் இப்படத்தில் வருகிறார். படைத்தலைவன் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.