ஹைதராபாத் : 2024ம் ஆண்டு அதிக வருமான வரி செலுத்தியவர்கள் பட்டியலை பார்ச்சூன் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ளது. இதில், முதல் 10 இடங்களில் பாலிவுட் நடிகர்கள் அதிகம் இடம்பெற்றுள்ளனர். அந்த வகையில், முதலிடத்தில் நடிகர் ஷாருக்கான் உள்ளார். இரண்டாம் இடத்தில் தென்னிந்திய நடிகர் விஜய் உள்ளார். 3ம் இடத்தில் சல்மான் கானும், 4ம் இடத்தில் அமிதாப்பச்சனும், 5ம் இடத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் உள்ளனர்.
முதல் 10 இடங்கள் :
- ஷாருக்கான் ரூ.92 கோடி
- விஜய் ரூ.80 கோடி
- சல்மான் கான் ரூ.75 கோடி
- அமிதாப்பச்சன் ரூ.71 கோடி
- விராட் கோலி ரூ.66 கோடி
- அஜய் தேவகன் ரூ.42 கோடி
- எம்.எஸ்.தோனி ரூ.38 கோடி
- ஹிர்த்திக் ரோஷன் மற்றும், சச்சின் டெண்டுல்கர் ரூ.28 கோடி
- கபில் ஷர்மா ரூ.26 கோடி ஆகியோர் முதல் 10 இடங்களில் உள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : 'கோட்' படம் பார்க்க வெளிநாடுகளில் இருந்து வந்த ரசிகர்கள்; ரோகிணி திரையரங்கில் களைகட்டிய கொண்டாட்டம்! - GOAT rohini theatre celebration