ETV Bharat / entertainment

தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு நடிகர் நிவின் பாலி மறுப்பு! - Nivin pauly

Nivin pauly: பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் அளித்த புகாருக்கு நடிகர் நிவின் பாலி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் தன் மீதான இந்த குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் நிவின் பாலி
நடிகர் நிவின் பாலி (Credits - ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2024, 7:45 PM IST

Updated : Sep 3, 2024, 10:47 PM IST

எர்ணாகுளம்: மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக கேரள அரசு ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்டது. அனைத்து மொழி சினிமா துறையிலும் ஹேமா கமிட்டி பெரும் பேசுபொருளானது. இதனையடுத்து, மலையாள நடிகைகள் பலர் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி மீது பாலியல் புகார் அளித்துள்ளார். அதில், தனக்கு சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

ஊனுக்கல் போலீசார் அந்த பெண்ணிடம் விரிவான அறிக்கை பெற்ற பிறகு, நிவின் பாலி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். நடிகர் நிவின் பாலி தவிர, ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு நடிகர் ஜெயசூர்யா, சித்திக் உள்ளிட்டோர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி தமிழில் ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகர் நிவின் பாலி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,"நான் ஒரு பெண்ணை துஷ்பிரயோகம் செய்ததாக ஒரு தவறான செய்தியைக் கண்டேன். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதை அறிந்து கொள்ளவும்.

இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்ல நான் உறுதியாக இருக்கிறேன். மேலும், பொறுப்பானவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். இந்த விவகாரத்தை சட்டப்படி சந்திப்பேன்" என்று நிவின் பாலி தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஆந்திரா, தெலங்கானா மழை வெள்ள பாதிப்பு: 1 கோடி நிவாரண நிதி வழங்கிய ஜூனியர் என்டிஆர்! - Junior NTR donation to Flood relief

Last Updated : Sep 3, 2024, 10:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.