சென்னை: தமிழ் உள்பட தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்பவர் சமந்தா. இவர் இன்று தனது 37வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இந்நிலையில், தனது புதிய படம் குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில், 'மின்னுவதெல்லாம் பொன்னல்ல' என்ற தலைப்பில் Maa Inti - Bangaram என்ற படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், நடிகை சமந்தா கையில் துப்பாக்கியுடன் இருக்கும் போஸ்டர் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் படத்தை Tralala Moving Pictures என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இது சமந்தாவின் புதிய தயாரிப்பு நிறுவனம் ஆகும். படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கும் எனவும் சமந்தா அறிவித்துள்ளார்.
இந்தப் படத்தை யார் இயக்குகிறார் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை. ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் மிரட்டலாக இருப்பதாகவும், “இந்த போஸ்டரை டக்குனு பார்த்தால் சமந்தா மாதிரி இல்லை. நடிகை துஷாரா விஜயன் மாதிரி இருக்கிறது” என ரசிகர்கள் கூறுகின்றனர்.
முன்னதாக, நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் நான் ஈ, அஞ்சான், தெறி, 10 எண்றதுக்குள்ள, கத்தி, மெர்சல் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில், மயோடிசிஸ் என்ற அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக சினிமாவுக்கு இடைவெளி விட்டு தற்போது மீண்டும் நடிக்கத் துவங்கி உள்ளார்.
இதையும் படிங்க: ரீ ரிலீஸ் படங்களால் சிறிய பட்ஜெட் படங்களுக்கு பாதிப்பா? கேபிள் சங்கர் பிரத்யேக பேட்டி! - Re Release Flims