ETV Bharat / entertainment

விஷாலின் ரத்னம் முதல் ஒரு நொடி வரை.. இன்று ரிலீசான படங்கள் என்னென்ன? - Rathnam and Oru Nodi Movie Release - RATHNAM AND ORU NODI MOVIE RELEASE

Rathnam and Oru Nodi Movie Release: இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்த ‘ரத்னம்’ திரைப்படமும், இயக்குநர் பி.மணிவர்மன் இயக்கத்தில் ‘ஒரு நொடி’ திரைப்படமும் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Oru Nodi Movie Release
Rathnam Movie Release
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 26, 2024, 3:13 PM IST

சென்னை: விஷால் - இயக்குநர் ஹரி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் ரத்னம். தாமிரபரணி படத்தின் மூலம் முதல் முறையாக இணைந்த கூட்டணிக்கு, அப்படம் மாபெரும் வெற்றியைக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்த பூஜை திரைப்படமும் நல்ல வெற்றியை பெற்றுத் தந்தது.

இரு வெற்றிகளைத் தொடர்ந்து மூன்றாவது முறை ரத்னம் படத்தில் இணைந்துள்ளனர். இதில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும், கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். விஷாலின் 34-வது படமான ரத்னம் படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஒரு நொடி: இயக்குநர் பி.மணிவர்மன் இயக்கத்தில், தயாரிப்பாளரும், திரைப்பட விமர்சகரும், விநியோகஸ்தருமான தனஞ்ஜெயனின் கிரியேட்டிவ் என்டர்டெயின்மென்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் வெளியிட்டுள்ள படம் ‘ஒரு நொடி’. இப்படத்தில் தமன் குமார், வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், பழ.கருப்பையா, தீபா சங்கர், நிகிதா, அருண் கார்த்திக் ஆகியோர் நடித்துள்ளனர்.

மதுரை அழகர் மூவிஸ் மற்றும் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் அழகர் ஜி மற்றும் கே.ஜி.ரத்தீஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். படத்திற்கு சஞ்சய் மாணிக்கம் இசையமைத்துள்ளார். கிரைம், மிஸ்டரி, திரில்லர் வடிவில் உருவாகி உள்ள இந்த படத்தின் ட்ரைலர் பலரையும் கவர்ந்து இருந்தது.

இப்படமும் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஒரு நொடியில் நடக்கும் அசம்பாவிதம் காரணமாக ஏற்படும் பிரச்னைகள் பற்றிய படமாக இது உருவாகியுள்ளது. மேலும், கொலை தூரம், இது மிருகங்கள் வாழும் இடம் ஆகிய படங்களும், சிரித்து வாழ வேண்டும், முதல் மரியாதை ஆகிய ரீ ரிலீஸ் படங்களும் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: “அட்லீஸ்ட் அவர் பையன் கூடவாது நடிக்கனும்..” - ரவீனா குறிப்பிட்டது யாரை? - Half Bottle Album Song

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.