ETV Bharat / entertainment

ரஜினியின் 'தளபதி' திரைப்படம் ரீ ரிலீஸ்.. எப்போ தெரியுமா? - RAJINIKANTH

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'தளபதி' திரைப்படம் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி தளபதி பட போஸ்டர்
ரஜினி தளபதி பட போஸ்டர் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 16, 2024, 9:53 AM IST

சென்னை: தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது ரஜினியின் படங்கள் வெளியாகி தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது. சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் உலகம்‌ முழுவதும் ரூ.600 கோடி வரை வசூலித்தது.‌ தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், 'கூலி' என்ற படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் டிசம்பர் 12ஆம் தேதி வருகிறது. அப்போது அவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், அவர் நடித்த 'தளபதி' திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. 1991ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்முட்டி, அரவிந்த் சாமி, சோபனா உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் தளபதி. இப்படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இன்று வரை கிளாசிக் பட வரிசையில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'குபேரா' படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!

மேலும், இளையராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் இன்று வரையிலும் அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளவை. படம் வெளியாகி 33 ஆண்டுகளைக் கடந்துள்ளது. தற்போது ரஜினி பிறந்தநாளுக்கு மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. எஸ்எஸ்ஐ புரொடக்சன்ஸ் நிறுவனம் தளபதி படத்தை தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் ரீ ரிலீஸ் செய்கிறது. அதுமட்டுமின்றி, ரஜினிகாந்த் பிறந்த நாள் அன்று அவர் நடிப்பில் அடுத்து வரவுள்ள புதிய படத்தின் (ஜெயிலர் 2) அறிவிப்பும் வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.