சென்னை: மத்திய அரசு கடந்த 1954ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கி வருகிறது. இதில் சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கி வருகிறது. கடந்த வருடம் கடைசி விவசாயி படத்தில் நடித்த மறைந்த நல்லாண்டி, இரவின் நிழல் படத்தில் இடம்பெற்ற "மாயவா தூயவா" பாடலை பாடிய ஷ்ரேயா கோஷல் ஆகியோர் விருது பெற்றனர்.
சிறந்த ஒளிப்பதிவு
— PIB in Tamil Nadu (@pibchennai) August 16, 2024
ரவி வர்மன்
பொன்னியின் செல்வன் - 1#NationalFilmAwards pic.twitter.com/N7uSF729WH
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 16) 2022 ஆண்டிற்கான 70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த திரைப்பமாக பொன்னியின் செல்வன் முதல் பாகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு சிறந்த இசையமைப்பாளர் விருதை பெறுகிறார்.
சிறந்த ஒலிப்பதிவு
— PIB in Tamil Nadu (@pibchennai) August 16, 2024
ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன் - 1 #NationalFilmAwards pic.twitter.com/zcwJUX6eTF
திருச்சிற்றம்பலம் படத்திற்காக சிறந்த நடன இயக்குநர் விருதை ஜானி மற்றும் சதிஷ், மற்றும் சிறந்த நடிகை விருதை திருச்சிற்றம்பலம் படத்திற்காக நடிகை நித்யா மேனன் பெறுகிறார்.
அதேபோல் பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை ரவி வர்மன் பெறுகிறார். மேலும் பொன்னியின் செல்வன் படத்திற்காக சிறந்த ஒலி வடிவமைப்பாளர் விருதை அனந்த் கிருஷ்ணமூர்த்தி பெறுகிறார். காந்தாரா படத்திற்காக நடிகர் ரிஷப் ஷெட்டி சிறந்த நடிகர் விருதை பெறுகிறார். பொன்னியின் செல்வன் திரைப்படம் அமேசான் பிரைம் ஒடிடி தளத்திலும், திருச்சிற்றம்பலம் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஒடிடி தளத்திலும் உள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: 'தளபதி 69' அரசியல் கலந்த படமா?... இயக்குநர் எச்.வினோத் கொடுத்த அப்டேட்! - H vinoth confirms Thalapathy 69