ETV Bharat / entertainment

ஆரவாரமின்றி வெற்றி பெற்ற 'போகுமிடம் வெகு தூரமில்லை'.. படக்குழு கொண்டாட்டம்! - pogumidam vegu thooramillai

author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 28, 2024, 5:28 PM IST

Pogumidam Vegu Thooramillai: விமல், கருணாஸ் நடித்துள்ள 'போகுமிடம் வெகு தூரமில்லை' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், படக்குழு சென்னையில் உள்ள தனியார் திரையரங்கில் கேக் வெட்டி கொண்டாடினார்

போகுமிடம் வெகு தூரமில்லை படக்குழு
போகுமிடம் வெகு தூரமில்லை படக்குழு (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: ஷார்க் 9 பிக்சர்ஸ் சார்பில், சிவா கில்லரி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜாவின் இயக்கத்தில் விமல், கருணாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'போகுமிடம் வெகு தூரமில்லை'. இப்படத்தில் விமலுடன் கருணாஸ், ஆடுகளம் நரேன், பவன், தீபா சங்கர், சார்லஸ் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கிறது. பொதுமக்கள் பலரும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர்.

பதற வைக்கும் இடைவேளை காட்சியும், பரபர எனச் செல்லும் திரைக்கதையும் ரசிகர்களை கவர்ந்து இருப்பதால் 'போகுமிடம் வெகு தூரமில்லை' பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. கடந்த வாரம் வாழை, கொட்டுக்காளி ஆகிய படங்களுடன் வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்றதால் இப்படம் கவனிக்கப்பாடமல் போனது. ஆனாலும், சமூக வலைத்தளங்களில் படம்‌ பார்த்தவர்கள் பாராட்டியதை தொடர்ந்து, தற்போது இப்படத்தை அதிக பார்வையாளர்கள் காண ஆர்வம் காட்டுகின்றனர்.

விமல் மற்றும் கருணாஸ் இருவரின் நடிப்பும் பாராட்டப்பட்டது. 'போகுமிடம் வெகு தூரமில்லை' திரைப்படம் அமைதியாக வந்து வெற்றி பெற்றுள்ளது. மனித உணர்வுகளை அழகாகவும், அழுத்தமாகவும் இயக்குநர் பேசி இருப்பதாக ரசிகர்கள், பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

தற்போது 'போகுமிடம் வெகு தூரமில்லை' திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைத்துள்ளது. இது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக 'போகுமிடம் வெகு தூரமில்லை' படக்குழுவினர் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள திரையரங்கிற்கு சென்று, மக்களோடு இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். மேலும் மக்களின் ஆதரவிற்கு படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: வசூல்ராஜா MBBS நடிகர் மீது பாலியல் புகார்.. திணறும் மலையாளத் திரையுலகம்! - Hema committee report

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.