ETV Bharat / entertainment

கேன்ஸ் விழாவில் விருதால் ஜொலித்த பாயல் கபாடியா.. மோடி, ராகுல் காந்தி வாழ்த்து! - Payal Kapadia - PAYAL KAPADIA

CANNES FILM FESTIVAL 2024: பாயல் கபாடியா இயக்கிய ALL WE IMAGINE AS LIGHT திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருதினை வென்றதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நரேந்திர மோடி, ராகுல் காந்தி, பாயல் கபாடியா புகைப்படம்
நரேந்திர மோடி, ராகுல் காந்தி, பாயல் கபாடியா புகைப்படம் (credits - ANI/ AP)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 26, 2024, 7:59 PM IST

ஹைதராபாத்: சர்வதேச கேன்ஸ் திரைப்பட விழா கடந்த மே 14 முதல் 25ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. இந்த விழாவில், பாயல் கபாடியா இயக்கிய ALL WE IMAGINE AS LIGHT படம் சிறந்த படத்திற்கான கிராண்ட் ப்ரிக்ஸ் விருதினை வென்றது. கடந்த 30 ஆண்டுகளில் இந்தியா சார்ந்த எந்த படமும் கேன்ஸ் திரைப்பட விழாவில் தேர்வாகாத நிலையில், இந்த ஆண்டு பாயல் கபாடியாவின் படம் தேர்வாகி உள்ளது.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “77வது கேன்ஸ் திரைப்பட விழாவில் ALL WE IMAGINE AS LIGHT படம் சிறந்த படத்திற்கான கிராண்ட் ப்ரிக்ஸ் விருதினை வென்று சாதனை படைத்த பாயல் கபாடியாவால் இந்தியா பெருமை கொள்கிறது.

எஃப்டிஐஐ முன்னாள் மாணவர் பாயல் கபாடியா. இவரது திறமை தற்போது உலக அரங்கில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள செழுமையான படைப்பாற்றலின் ஒரு பார்வையை அளிக்கிறது. இந்த பாராட்டுக்கள் அவரை கௌரவிப்பதை மட்டுமல்லாமல், புதிய திரைப்பட தயாரிப்பாளர்களையும் ஊக்குவிக்கும்” என எக்ஸ் பதிவில் கூறி உள்ளார்.

மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “77வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய நட்சத்திரங்கள் ஜொலிக்கின்றனர். கிராண்ட் ப்ரிக்ஸ் விருதினை வென்ற ALL WE IMAGINE AS Light படக்குழுவிற்கும், இயக்குநர் பாயல் கபாடியாவிற்கு எனது வாழ்த்துக்கள்.

சிறந்த நடிகைக்கான விருதினை இந்தியாவைச் சேர்ந்த நடிகை அனசுயா செனகுப்தா ஷேம்லெஸ் படத்திற்காக வென்றுள்ளார். இந்த பெண்கள் வரலாற்றை எழுதி முழு இந்திய திரைப்பட சகோதரத்துவத்தையும் ஊக்கப்படுத்தி உள்ளனர்” என தனது பதிவில் கூறி உள்ளார்.

இதையும் படிங்க: ரீவைண்ட்.. கமல்ஹாசனின் இந்தியன் 1 ரீரிலீஸ் தேதி அறிவிப்பு! - Indian Movie Rerelease

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.