ETV Bharat / entertainment

ஆஸ்கர் 2024: 7 ஆஸ்கரை வென்றது நோலனின் "ஓப்பன்ஹெய்மர்" - ஓப்பன்ஹெய்மர் பெற்ற ஆஸ்கர் விருது

96th Oscars Awards: அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்ற 96வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், 13 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டிருந்த "ஓப்பன்ஹெய்மர்" படம் சிறந்த திரைப்படம் உட்பட 7 பிரிவுகளின் கீழ் விருதுகளை வென்றுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 11, 2024, 2:02 PM IST

லாஸ் ஏஞ்சல்ஸ்: கடந்த ஆண்டு வெளியாகி உலகெங்கிலும் பெரும் வரவேற்பை பெற்ற படம் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான "ஓப்பன்ஹெய்மர்". இந்த படம் வெளியான சமயத்திலிருந்தே படம் நிச்சயம் ஆஸ்கர் விருது வெல்லும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. அந்தவகையில், "ஓப்பன்ஹெய்மர்" படம் 13 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்சில் 96வது ஆஸ்கர் விருது இன்று (மார்ச் 11) நடைபெற்றது. இவ்விழா துவங்கியதில் இருந்து அனைவரின் பார்வையும் "ஓப்பன்ஹெய்மர்" படத்தின் மீதுதான் இருந்தது. கடந்த ஆண்டு வெளியான "பார்பி" உள்ளிட்ட மற்ற பிரம்மாண்ட திரைப்படங்களையும் மிஞ்சி அதிக விருதுகளை வென்றது.

அந்தவகையில் சிறந்த படத்திற்கான விருது, சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த இயக்குநர் என 7 பிரிவுகளின் கீழ் "ஓப்பன்ஹெய்மர்" படம் விருதுகளை வென்று குவித்தது. இதில், இயக்குநர் கிர்ஸ்டோபர் நோலன், நடிகர்கள் ராபர்ட் டவுனி ஜூனியர் மற்றும் கிலியன் மர்பி ஆகியோர் தங்களின் முதல் ஆஸ்கர் விருதை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கிறிஸ்டோபர் நோலன், சிறந்த இயக்குநர் பிரிவில் 2017ஆம் ஆண்டு டன்கிர்க் (Dunkirk) படத்திற்காகவும், 2010ஆம் ஆண்டு இன்செப்சன் (Inception) படத்திற்காகவும் மற்றும் சிறந்த திரைக்கதைக்காக 2001ஆம் ஆண்டு மெமென்டோ (Memento) படத்திற்காக என மூன்று முறை ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில் 96வது ஆஸ்கர் விருதில் சிறந்த இயக்குநருக்கான விருதை வென்றுள்ளார்.

மேலும், மனித வரலாற்றின் முக்கிய நிகழ்வு ஒன்றை மையமாகக் கொண்டு உருவாகிய இப்படத்தின் பெரும்பகுதி கருப்பு வெள்ளையில் இருந்த போதிலும், இன்றைய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, உலக அளவில் சுமார் ஒரு பில்லியன் (டாலர்கள்) வசூலை ஈட்டியது

மேலும், ஆஸ்கர் விருதுகளுக்கு முன்னதாக "ஓப்பன்ஹெய்மர்" படம் பல விருதுகளை வென்றிருந்தது. "அணுகுண்டின் தந்தை" என்று அழைக்கப்படும் விஞ்ஞானி ஜே.ராபர்ட் ஓப்பன்ஹெய்மர், இரண்டாம் உலகப் போரின்போது உலகின் முதல் அணுகுண்டுகளை கண்டுபிடித்தது குறித்தும், அதன் பிறகு அவர் சந்தித்த அரசியல் சிக்கல்கள் குறித்தும் இப்படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது.

இப்படத்தில் கிலியன் மர்பி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ராபர்ட் டவுனி ஜூனியர், எமிலி பிளண்ட், புளோரன்ஸ் பக் உள்ளிட்ட பல ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த படத்தில் அணுகுண்டு சோதனையின் போது வெடிக்கும் காட்சி மிகவும் பிரம்மாண்டமாகவும், தத்ரூபமாகவும் உருவாக்கப்பட்டிருந்தது ரசிகர்களை மிகவும் கவர்ந்தது எனலாம்.

இதையும் படிங்க: Tenet-க்கு கிடைக்காத ஆஸ்கர் Oppenheimer-க்கு கிடைத்தது எப்படி? 3 முறை நோலனை புறந்தள்ளிய ஆஸ்கர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.