ETV Bharat / entertainment

ஜெயிலர்-2 இன்று அறிவிப்பு வெளியாகுமா? ஜெயிலர் ரிலீசாகி ஒராண்டு நிறைவு! - Jailer 2 Announcement - JAILER 2 ANNOUNCEMENT

1 year of jailer: நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஒராண்டு நிறைவாகும் நிலையில், ஜெயிலர் 2ஆம் பாகத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயிலர் போஸ்டர்
ஜெயிலர் போஸ்டர் (Credits - Sun Pictures Production)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 10, 2024, 12:39 PM IST

சென்னை: இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிவராஜ் குமார், மோகன்லால், விநாயகன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்த கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், ஜெயிலர் வெளியாவதற்கு முன் எதிர்பார்ப்பு குறைவாக இருந்தது. ஆனால் ஜெயிலர் வெளியானது முதல் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தியது.

முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்தின் அறிமுக காட்சி, வசனங்கள், விநாயகனை சந்திக்கும் காட்சி, கிளைமாக்ஸ் என தியேட்டரில் விசில் பறந்தது. நெல்சன் ரஜினிகாந்திற்கு உள்ள நட்சத்திர பிம்பத்தை சரியாக பயன்படுத்தியுள்ளார் என பாராட்டி வந்தனர். 600 கோடிக்கு மேல் வசூல் செய்த ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது. இதனைத்தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் வரும் அக்டோபர் மாதம் வேட்டையன் திரைப்படம் வெளியாகவுள்ளது.

மேலும் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் 'கூலி' படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே இயக்குநர் நெல்சன் ஜெயிலர் இரண்டாம் பாகத்தின் கதையை எழுதி முடித்துவிட்டதாகவும், ரஜினிகாந்தின் 172வது படமாக ஜெயிலர் இருக்கும் எனவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இத்தகவலை உறுதிப்படுத்தும் வகையில், ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த நடிகர் யோகி பாபு சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ஜெயிலர் 2 ரெடியாகி வருவதாக கூறியுள்ளார்.

மேலும் ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு 'ஹுகும்' என தலைப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் ரசிகர்கள் '1 year of jailer’ என சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் பதிவிட்டு கொண்டாடி வரும் நிலையில், இன்று ஜெயிலர் 2ஆம் பாகத்தின் அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: "ஹாட் ஸ்பாட் பட இயக்குநர் மேல் எனக்கு பயங்கர கோபம்"- நடிகர் விஷ்ணு விஷால் கூறியது என்ன? - vishnu vishal about hot spot movie

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.