ஹைதராபாத்: மிஸ் இந்தியா 2024 இறுதிப் போட்டி மும்பையில் நேற்று (அக்.16) நடைபெற்றது. இந்த வருடம் மிஸ் இந்தியா போட்டி தொடங்கி 60வது வருடத்தை நிறைவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் இந்த வருடம் மிஸ் இந்தியா போட்டி பெரிய அளவில் நடத்தப்பட்டு, அழகிகள் தேர்விற்கும் பல்வேறு சுற்றுகள் வைக்கப்பட்டது. இறுதியில் மாநில அளவில் 30 அழகிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பல நிபுணர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மிஸ் இந்தியா 2024 பட்டத்தை மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த நிகிதா போர்வால் வென்றார். இவருக்கு கடந்த ஆண்டு வெற்றி பெற்ற நந்தினி குப்தா மற்றும் நேஹா தூபியா ஆகியோர் பட்டத்தை வழங்கி கௌரவித்தனர். டிவி தொப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய நிகிதா போர்வால், 60 திரையரங்க நாடகங்கள் மற்றும் 250க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும் பங்கேற்றுள்ளார்.
மிஸ் இந்தியா பட்டம் பெற்ற நிகிதா போர்வால் பேசுகையில், “நான் எவ்வளவு தூரம் கடந்து வந்துள்ளேன் என தனது வாழ்க்கையை திரும்பி பார்க்கையில், நான் மிகவும் வலிமை மிக்கவளாக உணர்கிறேன்” என கூறியுள்ளார். மேலும் அவருக்கு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை என கூறினார்.
இதையும் படிங்க: பெண்களுடன் நட்பு பாராட்டும் ஆர்னவ்... கேலி செய்த போட்டியாளர்களிடம் நறுக்கென கேள்வி கேட்ட ஜெஃப்ரி!
இதனைத்தொடர்ந்து மிஸ் இந்தியா 2024 போட்டியில் ரேகா பாண்டே இரண்டாவது இடத்தையும், யுஷி டோலாக்கியா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். மிஸ் இந்தியா பட்டம் வென்றுள்ள நிகிதா போர்வால், உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ளார். முன்னதாக உலக அழகி போட்டியில் ஐஸ்வர்யா ராய், ப்ரியங்கா சோப்ரா, மனுஷி சில்லார் ஆகியோர் பட்டம் வென்றுள்ளனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்