ETV Bharat / entertainment

"மோடி 3வது முறையாக பதவி ஏற்பது சாதனை".. ரஜினிகாந்த் புகழாரம்! - RAJINIKANTH

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 9, 2024, 11:51 AM IST

Updated : Jun 9, 2024, 12:24 PM IST

Rajinikanth: "ஜவஹர்லால் நேருக்கு பின்பு மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பதவி ஏற்கிறார் இது அவருடைய சாதனை" என நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

மோடி மற்றும் ரஜினிகாந்த்
மோடி மற்றும் ரஜினிகாந்த் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: இந்திய நாடாளுமன்றத்தின் 18வது பொதுத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 290க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் 303 இடங்களை பெற்று அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பாஜக இந்த முறை 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

இதனால் ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகளின் கைகளை எதிர்நோக்கி உள்ளது. இதில் ஆந்திர மாநிலத்தின் தெலுங்கு தேசம் மற்றும் பீகாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பின் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்க உள்ளார்.

மோடி பதவியேற்பு: மோடி தலைமையில் புதிய அமைச்சரவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவி ஏற்க உள்ளது. டெல்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெறும் இந்த விழாவில் ஏராளமான முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். இதையடுத்து, இலங்கை, வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவுகள், செஷல்ஸ் மற்றும் மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் தங்கள் வருகையை உறுதி செய்துள்ளனர்.

ரஜினிகாந்த் புகழாரம்: குறிப்பாக இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்தும் பங்கேற்க உள்ளார். முன்னதாக விமான நிலையம் செல்லும் முன் போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டின் முன்பு நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில்"பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு செல்கிறேன். ஜவஹர்லால் நேருக்கு பின்பு மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பதவி ஏற்கிறார் இது அவருடைய சாதனை" என தெரிவித்தார்.

இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் பேசியதாவது, "நரேந்திர மோடி, தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்க உள்ளார். இது ஒரு மிகப்பெரிய சாதனை. அவருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.

அதேநேரம், இந்த மக்களவைத் தேர்தலில், ஒரு வலுவான எதிர்க்கட்சியைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இது ஜனநாயகத்துக்கு ஓர் ஆரோக்கியமான அறிகுறி. சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்கான அழைப்பு வந்துள்ளது.

விசிக,நாதக-விற்கு வாழ்த்துகள்: ஆனால் அது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை" என்றார். பிரதமர் மோடியின் அடுத்த 5 ஆண்டு கால ஆட்சி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "நன்றாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்" என்றார். தொடர்ந்து நாம் தமிழர், விசிக ஆகிய கட்சிகள் மாநில கட்சியாக அங்கிகாரம் பெற்றுள்ளது என்ற கேள்விக்கு, "அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: "கற்பனைக்கு உருவம் கொடுத்தவர் ராமோஜி ராவ்"- நடிகர் விஜய் சேதுபதி!

Last Updated : Jun 9, 2024, 12:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.