ETV Bharat / entertainment

"முன்னாடி புலம்பினேன்.. ஆனால் இப்போ" - நகுல் எமோஷனல் பேச்சு! - Nakkhul about Devayani - NAKKHUL ABOUT DEVAYANI

Vascodagama: வாஸ்கோடகாமா இசை வெளியீட்டு விழாவில், இப்போது ஒவ்வொரு நொடியும் சந்தோசமாக நினைத்து வாழ்கிறேன் என நடிகர் நகுல் தெரிவித்துள்ளார்.

வாஸ்கோடகாமா போஸ்டர், நகுல்
வாஸ்கோடகாமா போஸ்டர், நகுல் (Credits -nakkhul X Page, ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 20, 2024, 10:47 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் நகுல். தற்போது இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் ஆர்ஜிகே இயக்கத்தில் வாஸ்கோடகாமா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பிளாக் பஸ்டர் புரொடக்சன்ஸ் நிறுவனமும், டத்தோ சுபாஸ்கரனும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் நகுல், ஷாந்தனு, இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், அறிவழகன், நடிகைகள் தேவயானி, அர்த்தனா பினு, பாடகர் அந்தோணிதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் நகுல், "அக்கா பேசினதுக்குப் பிறகு ரொம்ப எமோஷனல் ஆகிவிட்டது. நான் நிறைய பேரிடம் அவ்வளவாக பேச மாட்டேன். முன்னாடி நிறைய புலம்பிருக்கேன். என்ன நடக்குது என்று தெரியவில்லை. அக்கா இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அக்கா வந்துட்டாங்க. ஏதோ ஒரு காரணத்தால் பாய்ஸ் பட வாய்ப்பு கிடைத்தது. பாய்ஸ் படத்தில் தான் சினிமாவை கற்றுக் கொண்டேன். எனக்கு அது ரொம்ப பிடித்திருந்தது.‌

சினிமாவில் எனக்கு பல வாய்ப்புகள் வேறு விதமாக கிடைத்தன. வல்லினம் எனக்கு ரொம்ப பிடித்த படம். அந்த படத்தில் இயக்குநர் அறிவழகன் என்னை ரொம்ப நம்பினார். சில விஷயங்களை நம்பி தான் ஒவ்வொரு படமும் பண்றோம். ஆனால் படம் சரியாக வரவில்லை என்றால் அதற்கு ஒன்னும் பண்ண முடியாது.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் சாரைப் பற்றி தெனாலி ஷூட்டிங்கில் அக்கா நிறைய சொல்லி இருக்காங்க. இன்னைக்கு அவர் என்னை பாராட்டி பேசியது எனக்கு ரொம்ப சந்தோசம். இப்போது ஒவ்வொரு நொடியும் சந்தோசமாக நினைத்து வாழ்கிறேன்” என்றார்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் சாந்தனு, ”2011 முதல் எனக்கும் நகுலுக்கும் பழக்கம். தொட்டா ஷாக் அடிக்குற மாதிரி நகுல் அவ்வளவு எனர்ஜி. நிறைய பேர் நிறைய விதத்தில் சாமிங்காக (charming) இருப்பாங்க. அதே மாதிரி நகுல் சாமிங் ஸ்டார். நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் நமக்கு ஆசான் என்று அப்பா கூறுவார். நான் நகுலிடம் நிறைய விஷயங்களை முன்னேற்றமாக பார்க்கிறேன். மனதளவில் தன்னை நிதானமாக வைத்திருக்கிறார். இன்றைக்கு இருக்கும் சினிமா காலகட்டத்தில் ஒரு படம் வெற்றி பெறுவது கடினம். அதற்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும்” என்று கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: மேடையில் கண்கலங்கிய தேவயானி.. பாசப்பிணைப்பில் நகுல்! - Devayani Nakul emotional

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.