ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபல்லா ஆகிய இருவருக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா தெலுங்கில் ஏ மாயா சேசாவே, மனம், லவ் ஸ்டோரி, மஜிலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவருடன் நடிகை சமந்தா விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக் ஏ மாயா சேசாவே, மனம், மஜிலி ஆகிய படங்களில் நடித்தார்.
இந்நிலையில் நாக சைதன்யா, சமந்தா ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து டோலிவுட்டில் மிகவும் பிரபலமான ஜோடியாக வலம் வந்த நாக சைதன்யா, சமந்தா இருவரும் கடந்த 2021ஆம் ஆண்டு பிரிவதாக அறிவித்தனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நடிகர் நாக சைதன்யா பிரபல நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வருவதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று இரு குடும்பத்தினரும் நேரில் சந்தித்து திருமணம் குறித்து பேசவுள்ளதாக நாக சைதன்யாவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து சமூக வலைதளங்களில் நாக சைதன்யா, சோபிதா துலிபாலா ஆகிய இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகை சோபிதா துலிபாலா கடந்த 2013ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார். 2016ஆம் ஆண்டு சினிமாவில் நடிக்க தொடங்கிய இவர், பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: சினிமா தயாரிப்பாளர்களுக்கு சங்கம் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது என்ன? - Tamil film producers council