ETV Bharat / entertainment

“இசையை விட மொழிதான் பெரியது” - இசை அமைப்பாளர் தருண்குமார்! - Music Director Dharunkumar - MUSIC DIRECTOR DHARUNKUMAR

Music Director Dharunkumar: பேய் காதல் என்ற ஆல்பம் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் தருண்குமார், இசையை விட மொழி தான் பெரியது என்றும், அந்த காலத்திலிருந்து பாடல்களில் இருக்கக்கூடிய வார்த்தைகளைக் கேட்டு தான் வளர்ந்து வந்தோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இசை அமைப்பாளர் தருண்குமார் மற்றும் இளையராஜா புகைப்படம்
இசை அமைப்பாளர் தருண்குமார் மற்றும் இளையராஜா புகைப்படம் (Credits - ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 7, 2024, 5:25 PM IST

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லீ மேஜிக் ஸ்டுடியோவில் சோனியா அகர்வால் மற்றும் இசையமைப்பாளர் தருண்குமார் நடிப்பில் வெளியான பேய் காதல் என்ற ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இசை அமைப்பாளர் தருண்குமாரிடம் தமிழ் சினிமாவில் நிறைய இசையமைப்பாளர்கள், நடிகர்கள் அவதாரம் எடுத்து வருகிறார்கள், அந்த வகையில், நீங்களும் நடிப்பீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். எதிர்காலத்தில் தனக்கு ஏத்த கதைகள் அமையும் பட்சத்தில் நடிப்பேன். போடா போடி திரைப்படத்தில் சிம்பு நடித்த காட்சி ஒன்று மிகவும் என்னைக் கவர்ந்தது. குறிப்பிட்ட அந்த காட்சிக்கு 20 முறைக்கு மேல் சரியான இசையை வழங்க முயற்சித்தேன். அந்த காட்சியில் சிம்புவின் நடிப்பை பார்த்து எனக்கு நடிப்பின் மீது ஆர்வம் வந்தது” என்று கூறினார்.

யாருடைய படங்களை ரீமேக்கில் நடிப்பீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “தனுஷின் நடிப்பு மிகவும் பிடிக்கும். குறிப்பாக, புதுப்பேட்டை போன்ற கதாபாத்திரங்கள் போன்று கிடைத்தால் நடிப்பேன்” என்று தெரிவித்தார். மேலும், “என்னைப் பொறுத்தவரை இசையை விட மொழி தான் பெரியது. அந்த காலத்திலிருந்து பாடல்களில் இருக்கக்கூடிய வார்த்தைகளைக் கேட்டு தான் வளர்ந்து வந்தோம் என்றார்.

ஒரு நல்ல பாட்டுக்கு இசை முக்கியமா அல்லது பாடல் வரிகள் முக்கியமா என திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து, இசையமைப்பாளர் இளையராஜா இடையே சர்ச்சை மூண்டது குறிப்பிடத்தக்கது. இவரைத் தொடர்ந்து பேசிய நடிகை சோனியா அகர்வாலிடம், இயக்குநர் செல்வராகவன் படத்தில் மீண்டும் நடிப்பீர்களா என்ற செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நல்ல கதைக்களம் அமைந்தால் கட்டாயம் நடிப்பேன் என பதிலளித்தார்.

இதையும் படிங்க: அப்புக்குட்டிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய் சேதுபதி.. எதற்காக தெரியுமா? - Actor Appukutty Birthday

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.