ETV Bharat / entertainment

“வேட்டையன் போன்ற படத்தில் தலைவர் இதுவரை நடித்ததில்லை”.. அனிருத் பேச்சு! - Anirudh about Vettaiyan - ANIRUDH ABOUT VETTAIYAN

'வேட்டையன்' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய அனிருத், இதற்கு முன்பு வெளிவந்த படங்களை விட வேட்டையன் ரஜினி படங்களில் வேறுபட்டு இருக்கும். இது போன்ற படங்களில் ரஜினிகாந்த் இதுவரை நடித்ததில்லை என கூறியுள்ளார்.

வேட்டையன் படம் குறித்து பேசிய அனிருத்
வேட்டையன் படம் குறித்து பேசிய அனிருத் (Credits - ETV Bharat Tamil Nadu, LYCA Producations X Page)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 21, 2024, 11:03 AM IST

சென்னை: இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'வேட்டையன்'. லைகா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில், வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (செப் 20) நடைபெற்றது. மேலும், வேட்டையன் படத்தின் டீசரும் நேற்று வெளியானது.

இதனையடுத்து விழாவில் பேசிய இசையமைப்பாளர் அனிருத், “இயக்குநர் ஞானவேல் உடன் என்னால் வேலை செய்ய முடியுமா என நினைத்தேன். ஆனால் அவரோட 'ஜெய் பீம்' படத்திற்கு நான் மிகப்பெரிய ரசிகன். வேட்டையன் திரைப்படம் மிகவும் நல்ல கதையம்சம் கொண்டது. மிகவும் வித்தியாசமான படம். இதற்கு முன்பு வெளிவந்த படங்களை விட இந்த ரஜினி படம் வேறுபட்டு இருக்கும். இது போன்ற படங்களில் ரஜினிகாந்த் இதுவரை நடித்ததில்லை.

நான் இதுவரை 34 படங்களுக்கு இசையமைத்துள்ளேன். பல இசை வெளியீட்டு விழாவை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த அரங்கத்திற்கு தற்போது வரும் போது இங்கு இருப்பதைப் போல ஒரு உணர்ச்சியை நான் இதுவரை பார்த்ததில்லை. இந்த இசை வெளியீட்டு விழாவில் நீங்கள் கொடுக்கும் உற்சாகம், இந்த உணர்வைத் தாண்டி எந்த விருதும் எனக்கு பெரிதல்ல” என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசுகையில், “ரஜினியின் அண்ணாமலை படம் தான் திரையில் நான் பார்த்த முதல் திரைப்படம். அப்போது இருந்து இப்போது வரை தலைவரை பார்க்கையில், அதனை விவரிக்க வார்த்தையில்லை. உங்களில் ஒருவனாகத்தான் நான் இங்கு நிற்கிறேன்” என்றார். மனசிலாயோ பாடல் குறித்து அனிருத் பேசுகையில், ”முதலில் மனசிலாயோ பாடலை மலேசியா வாசுதேவன் குரலில் உருவாக்கலாம் என ஐடியாவை கொடுத்ததே தலைவர் ரஜினி தான்” என்றார்.

இதையும் படிங்க: "வேட்டையன் எப்படியிருக்கும்?" ஆடியோ லான்ச்சில் சஸ்பென்ஸ் உடைத்த ரஜினி! - vettaiyan audio launch

மேலும் “உங்கள் முன்னிலையில் டீசரை வெளியிட்ட போது நீங்கள் கைதட்டியதைப் பார்த்து என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் வந்தது. அந்த உணர்வு இந்த உலகத்தில் ஒரே ஒருவருக்கு தான் வரும் அது ரஜினிகாந்துக்கு தான்” என்றார். கடைசியாக அனிருத் ’குறி வெச்சா இரை விழும்’ என்ற வசனத்தை பேசியவுடன் அரங்கம் அதிர்ந்தது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.