ETV Bharat / entertainment

"பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அனைத்து துறைகளிலும் உள்ளது" - மிஸ் இந்தியா பட்டம் வென்ற மலினா பேட்டி! - Miss India malina - MISS INDIA MALINA

Miss India malina: பாலியல் தொடர்பான பிரச்னைகள் சினிமாத் துறையில் மட்டுமல்லாமல் அனைத்து துறையிலும் இருக்கிறது. ஆனால் வெளியில் யாருக்கும் தெரியவில்லை என மிஸ் இந்தியா பட்டம் வென்ற மலினா கூறியுள்ளார்.

மிஸ் இந்தியா பட்டம் வென்ற மலினா
மிஸ் இந்தியா பட்டம் வென்ற மலினா (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 31, 2024, 7:45 PM IST

சென்னை: 60வது பெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டி 2024இல் தமிழ்நாடு சார்பாக கலந்து கொண்டு வெற்றி பெற்று, மிஸ் இந்தியா, மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்ற மலினா செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய மிஸ் இந்தியா அழகி பட்டம் பெற்ற மலினா, "18 வயதிலிருந்து இந்த மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொள்வதற்காக ஆறு வருடங்களாக கடின உழைப்பு மேற்கொண்டு வருகிறேன்.

முதல் முறை மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு தோல்வி அடைந்தாலும், அதன் ஆழத்தை உணர்ந்து மேலும் கடினமாக உழைக்கத் தொடங்கினேன். பகுதி நேர வேலைகள் செய்து அதில் கிடைத்த வருமானங்கள் மூலமே எனது பயிற்சிகளை மேற்கொண்டு, இந்த முறை ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் தமிழ்நாடு சார்பாக கலந்து கொண்டு வெற்றி பெற்றேன்.

கேரளா திரைத்துறையில் நடந்த பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் வருங்கால நடிகைகளுக்கு பயத்தை கலைந்துள்ளது. இதற்குமேல் இதுபோன்ற சம்பவங்களை எப்படி கையாள்வது என்ற ஒரு தெளிவு கிடைத்துள்ளது. மேலும், இதுபோன்ற நிகழ்வுகள் வருங்கால தலைமுறையினருக்கு ஏற்படாது என்ற நம்பிக்கை உள்ளது.

இதுபோன்ற பாலியல் தொடர்பான பிரச்னைகள் சினிமாத் துறையில் மட்டுமல்லாமல், அனைத்து துறையிலும் இருக்கிறது. ஆனால் வெளியில் யாருக்கும் தெரியவில்லை, சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் மூலமாக மட்டுமே இதுபோன்ற விஷயங்கள் வெளியே தெரிய வருகிறது.

சினிமாத் துறையில் இருக்கும் பெண்களுக்கு சுயமரியாதை மிகவும் முக்கியம், அவர்கள் கடின உழைப்பின் மூலம் மட்டுமே சினிமாத் துறையில் சாதிக்க வேண்டும். அவ்வாறு பெறும் வெற்றியே நிரந்தரமாக இருக்கும். மேலும் தற்போது இருக்கும் இயக்குநர்கள் புதுவிதமான கதைகளை உருவாக்க வேண்டும் என்றும், அதற்காக தானும் தயாராகி தற்போது பொழுதுபோக்கு குறித்தான படங்களில் நடித்து வருவதாகவும் கூறினார். பின்வரும் காலங்களில் ஆக்சன் திரைப்படங்களில் நடிப்பதற்காக கடந்த ஐந்து வருடங்களாக உடற்பயிற்சி, கிக் பாக்ஸிங், மார்ஷல் ஆர்ட்ஸ் போன்ற பயிற்சிகள் செய்து வருகிறேன்" என்றும் கூறியுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டும் விஜய்.. சென்சார் குழு வெளியிட்ட ’கோட்’ விமர்சனம் என்ன? - GOAT Review

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.