ETV Bharat / entertainment

மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்.. சீமான் பங்கேற்பு! - Master Mahendran new film poojai

Master Mahendran: மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம், இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 6, 2024, 7:08 PM IST

Updated : Feb 7, 2024, 7:47 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நிறைய படங்களில் நடித்தவர், மாஸ்டர் மகேந்திரன். அதன் பிறகு, ஹீரோவாக ஒரு சில படங்களில் நடித்தார். ஆனாலும், அவருக்கு சொல்லிக் கொள்ளும் படியான வாய்ப்புகளும், வரவேற்பும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் சிறு வயது விஜய் சேதுபதியாக நடித்திருந்தார். அதன் மூலம் மீண்டும் அவர் பிரபலமானார். தற்போது சில படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த நிலையில், சனா ஸ்டூடியோஸ் தயாரிக்கும் புதிய படத்தில் மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான், சரண், அருண்ராஜா காமராஜ் மற்றும் கல்யாண் ஆகியோர் பங்கேற்று, படப்பிடிப்பை தொடங்கி வைத்துள்ளனர். பிரமாண்டமாக பூஜையோடு தொடங்கிய இந்த விழாவில், படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இதற்கு முன்பு ஸ்ரீகாந்த் நடித்த ’எக்கோ’ படத்தை இயக்கிய நவின் கணேஷ் இயக்கும், இன்னும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படம், சர்வைவல் த்ரில்லராக உருவாக இருப்பதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முத்து, சந்தோஷ் சிவன் மற்றும் ரவி ஆகியோர் இந்தப் படத்தை இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்க, ஜீவிதா இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

மேலும் சார்லி, கும்கி அஸ்வின், கலக்கப்போவது யாரு புகழ் சரத் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் சாம் சி.எஸ்-க்கு இசை ஏற்பாட்டாளராக இருந்த (arranger) அபிஷேக் ஏஆர், இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இதற்கு முன்பு அவரது இசையில் உருவான ‘கேம் ஆன்’ ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது.

இந்த படத்திற்கு ரவிவர்மா ஒளிப்பதிவு செய்கிறார். அவருடைய ஒளிப்பதிவில் சமீபத்தில் வெளியான 'தூக்குதுரை' படம் ஒளிப்பதிவுக்காக பரவலான பாராட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ‘சிவகுமாரின் சபதம்’ மற்றும் ’ரவுடி பேபி’ படங்களுக்கு படத்தொகுப்பு செய்த தீபக், இதில் எடிட்டராக பணிபுரிகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் சென்னை மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் குறுகிய காலத்திலேயே படமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "பேச்சே கிடையாது வீச்சுதான்”.. GOAT அப்டேட் கொடுத்த யுவன் சங்கர் ராஜா!

Last Updated : Feb 7, 2024, 7:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.