ETV Bharat / entertainment

"கார்மேகம் போல வாரான் காளமாடன்.." மாரி செல்வராஜ் வெளியிட்ட புதிய படத்தின் அப்டேட்! - Bison Kalamadan

Bison Kaalamaadan movie update: மாரி செல்வராஜ் இயக்கத்தின் துருவ் விக்ரம் நடிக்கும் 'பைசன் காளமாடன்' படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. இப்படத்தை அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.

Bison Kaalamaadan Movie Photo
Bison Kaalamaadan Movie Photo (Director Mari Selvaraj X page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 6, 2024, 9:38 PM IST

Updated : May 6, 2024, 10:20 PM IST

சென்னை: தமிழ் சினிமாவின் சமூக நீதி பேசும் திரைப்படங்கள் மூலம், தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குநராகத் திகழ்பவர் மாரி செல்வராஜ். முன்னதாக, இவர் இயக்கிய பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படங்கள் சமூக நீதி பேசும் படங்களாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

தற்போது 'வாழை' எனும் படத்தை மாரி செல்வராஜ் இயக்கி முடித்துள்ளார். இப்படம் குறித்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள் மற்றும் அருவி மதன் ஆகியோர் நடிக்க உள்ளனர். மேலும், பைசன் நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார்.

அப்ளஸ் நிறுவனமும் (Applause Entertainment), நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு 'பைசன் காளைமாடன்' பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் பிரபல கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதற்காக, நடிகர் துருவ் விக்ரம் பல மாதங்களாகக் கபடி விளையாட்டு பயிற்சி மேற்கொண்டார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம், இயக்குநர் பா.ரஞ்சித், துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை பற்றியும், அவர்கள் சந்தித்த வலிகளையும் தன்னுடைய கடந்த படங்களில் தத்ரூபமாகப் படமாக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படமும் சமூக நீதி பேசும் சிறந்த படமாக இருக்கும் என ரசிகர்கள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இப்படத்தின் பெயர் குறித்த அறிவிப்பைப் புகைப்படத்துடன் கூடிப் பதிவாகவும், "கால்நடையாய் நடந்து வாரான் காளமாடன் அவன் கார்மேகம் போல வாரான் காளமாடன்…" என்கிற வாசகத்துடன் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்டிருந்தது ரசிகர்கள் மத்தியில் படம் குறித்த எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக 'பைசன் காளமாடன்' படம், கபடி விளையாட்டு குறித்த படமாக இருந்தாலும், தனது வழக்கமான பாணியை இதிலும் மாரி செல்வராஜ் பின்பற்றுவார் என்று ரசிகர் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: மிரட்டலான போஸ்டருடன் வெளியானது தனுஷின் 'ராயன்' படத்தின் அப்டேட்.. ரசிகர்கள் உற்சாகம்!

Last Updated : May 6, 2024, 10:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.