சென்னை: தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து பிரபலமானவர் மன்சூர் அலிகான். ஆரம்ப காலத்தில் விஜயகாந்த், சத்யராஜ், விஜய் உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து வந்தார். சமீபத்தில் விஜய் நடித்த லியோ படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி இந்திய புலிகள் கட்சி என்ற அரசியல் கட்சி தொடங்கி நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டார்.
இந்நிலையில் கடந்த செப் 8ம் தேதி நடைபெற்ற நடிகர் சங்கம் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற மன்சூர் அலிகான் நடிகர் விஜய் கட்சி தொடங்கியது குறித்து தவறாக பேசியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வந்தது.
இதையும் படிங்க : ‘சிங்கம் ஒன்று புறப்பட்டதே’... ரஜினிகாந்த், மலேசியா வாசுதேவன் கூட்டணியில் உருவான கிளாசிக் பாடல்கள் என்ன? - rajini malaysia vasudevan songs
இந்நிலையில் இதுகுறித்து மன்சூர் அலிகான் தற்போது விளக்கம் அளித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நடிகர் சங்கம் பொதுக்குழு கூட்டத்தில், சினிமாவை கெடுப்பதற்காக சிலர் அரசியல் கட்சி தொடங்கியுள்ளனர் என்று நான் பேசியதாக திரித்து சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
தம்பி விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார். அவரது புகழை கெடுக்கவும், மோகன்லால், மம்முட்டி ஆகியோர் அரசியலில் இறங்குவதை தடுப்பதற்கும் சினிமாக்காரர்கள் மீது அவதூறு பரப்புகிறார்கள் என்று தெளிவாக பேசியிருந்தேன். நான் விஜய்யை சொல்லவில்லை. தீய எண்ணத்துடன் இதனை பரப்பி உள்ளனர். இதனை விஜய்யின் கவனத்திற்கு
கொண்டு செல்லவும். தவறாக பிரச்சாரம் செய்து எனக்கு கெட்டபெயர் ஏற்படுத்த பார்க்கிறார்கள்" மன்சூர் அலிகான் விளக்கம் அளித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்