ETV Bharat / entertainment

உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள்: ’தக் லைஃப்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! - KAMAL HAASAN BIRTHDAY

Kamal haasan Birthday: இன்று நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, தக் லைஃப் படத்தின் ரிலீஸ் டீசர் வெளியாகியுள்ளது.

தக் லைஃப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
தக் லைஃப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு (Credits - @RKFI X Account)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 7, 2024, 11:25 AM IST

சென்னை: இன்று (நவ.07) கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு தக் லைஃப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் இன்டர்நேஷனல் இணை தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் ‘தக் லைஃப்’ (Thug life).

இப்படத்தில் சிலம்பரசன், நாசர், ஜோஜு ஜார்ஜ், அபிராமி, அசோக் செல்வன், ஐஷ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தக் லைஃப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். முன்னதாக தக் லைஃப் படத்தில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் இருவரும் இப்படத்திலிருந்து விலகினர். கேங்ஸ்டர் கதையாக உருவாகும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு டெல்லி, ரஷ்யா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த நிலையில், இன்று நடிகர் கமல்ஹாசனின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு தக் லைஃப் படத்தி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி தக் லைஃப் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தின் ரிலீஸ் டீசரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: தீபாவளி ரேஸில் ஆரவாரமின்றி வசூலை அள்ளும் 'லக்கி பாஸ்கர்'; காட்சிகள் அதிகரிப்பு!

’விண்வெளி நாயகா’ என்ற பாடலுடன் ஆக்‌ஷன் கலந்த டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசரில் கமல்ஹாசன், சிம்பு, உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் வெளியான கிளாசிக் ’நாயகன்’ திரைப்படத்திற்கு பிறகு தற்போது ’தக் லைஃப்’ படத்தில் இந்த கூட்டணி இணைந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.