ஹைதராபாத்: மலையாள சினிமாவில் கடந்த சில நாட்களுக்கு முன் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. மலையாள நடிகர்கள் சித்திக், ரஞ்சித் மற்றும் அந்நாள், இந்நாள் நடிகர்கள் ஆகியோர் மீது நடிகைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்ததால் அம்மா (AMMA) சங்கம் கலைக்கப்பட்டது. மேலும், இதனைப் பற்றி அம்மா சங்க தலைவரும், மூத்த நடிகருமான மம்மூட்டி பேசாமலே இருந்தார். இவர் பேசமால் இருந்தது பெரும் விமர்சனத்துக்குள்ளானது. இந்நிலையில், ஹேமா கமிட்டியின் அறிக்கையை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஹேமா கமிட்டி பரிந்துரைகள், தீர்வுக்கான ஆலோசனைகள் அனைத்தையும் நான் வரவேற்கிறேன். கமிட்டியில் குறிப்பிட்டுள்ளவற்றை அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து செயல்படுத்த முயற்சிக்க வேண்டும்.
திரைத்துறையை அனைவரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். சினிமாவில் எந்த வித அசம்பாவிதமும் நடைபெறாத வண்ணம் திரைத்துறையினர் கவனமாகவும், விழிப்பாகவும் இருக்க வேண்டும். பாலியல் ரீதியாக எழுப்பப்பட்ட புகார்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும், மலையாள திரையுலகில் பவர் ஹவுஸ் என்பது கிடையாது. ஹேமா கமிட்டி தனது அறிக்கையைச் செயல்படுத்த வேண்டும் என்றும், குற்றம் செய்தவர்களுக்கு தண்டனையை நீதிமன்றம் வழங்கும்" என தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: “இந்தியா வந்து நிரூபிக்கிறேன்”.. பாலியல் புகார் குறித்து நடிகர் ஜெயசூர்யா பதில்! - Hema COmmittee