ETV Bharat / entertainment

"அப்பாவை பற்றி இப்போ பேச வேண்டானு நினைக்கிறேன்" - லால் சலாம் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! - Aishwarya Rajinikanth

Lal Salaam: "அப்பாவை பற்றி இப்போ பேச வேண்டானு நினைக்கிறேன். நான் இசை வெளியீட்டு விழாவில் பேசியதை சுட்டிக் காட்டி அப்பாவிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. நான் மேடையில் இதைத் தான் பேச உள்ளேன் என்பது கூட அவருக்குத் தெரியாது" என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

lal salaam movie launch meet
lal salaam movie launch meet
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 5, 2024, 11:02 PM IST

சென்னை: லைகா புரொடக்சன்ஸ், சுபாஸ்கரன் தயாரித்து இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள படம் லால் சலாம். நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார்.

லால் சலாம் படத்தின் படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் விக்ராந்த், விஷ்ணு விஷால், தம்பி ராமையா, செந்தில், தங்கதுரை, திவாகர், நடிகை நிரோஷா, இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி மேடையில் நடிகர் விக்ராந்த் பேசுகையில், "என்ன சொல்வது என்று தெரியவில்லை. என் வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான ஒரு தருணத்தில் இருந்தேன். சினிமாவிற்கு வந்து 17 வருடம் ஆகிவிட்டது. எல்லாம் சரியாக இருந்தாலும் எங்கே மிஸ் ஆகிறது என்று தெரியவில்லை. சரி, சினிமா போதும் என்று முடிவில் தான் இருந்தேன்.

அப்போது தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போன் பண்ணி, லால் சலாம் படத்தை பற்றி சொன்னார். அப்போது தான் நினைத்தேன். இது கடவுள் கொடுத்த பரிசு. சினிமாவில் நான் இன்னும் இருக்க வேண்டும், இருப்பேன் என்று என்னை நம்ப வைத்தது. உங்களுக்கு நான் ரொம்ப கடமைப் பட்டுள்ளேன்" என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திடம் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்த படத்தில் விஷ்ணு விஷால் போட்ட உழைப்பு ரொம்ப பெரியது. சினிமாவில் நிச்சயமாகப் பெரிய இடத்துக்கு வர வேண்டும். நிறைய நாள் நானும் விஷ்ணுவும் தோளில் சாய்ந்து அழுதிருக்கிறோம். இரண்டு பேரும் நிறையப் பிரச்சினை மற்றும் சந்தோஷங்களைப் பார்த்திருக்கிறோம்.‌

இந்த படத்தின் ஷீட்டிங்கில், இரண்டு, மூன்று முறை ரஜினிகாந்த் சார் என்னைப் பாராட்டினார். அவருடன் நடித்த 30 நாட்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாது.‌ ரஜினி சாரிடம் நிறைய கேள்வி கேட்டிருக்கிறேன். ஏன் எப்போதும் யோசித்துக் கொண்டு இருக்கிறீங்க என்று கேட்டதற்கு, பாலச்சந்தர் சொல்லிக் கொடுத்ததை, சுட்டி காட்டி பேசுவார்.

இன்னும் அவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாக தன்னை நினைக்கவில்லை. இன்னும் பாலச்சந்தர் சார் ஸ்டூடன்ட்டாக தான் இருக்கிறார். இன்னும் கற்று கொண்டே இருக்கிறார். இந்த கதை எனக்கு அமைந்தது, நான் நடிக்க ரஜினிகாந்த் சார் ஒப்புக் கொண்டதற்கு நன்றி" என்று தெரிவித்தார்.

இதனை அடுத்து நடிகர் விஷ்ணு விஷால் பேசுகையில், "முக்கியமான படம் லால் சலாம். 1990 காலத்தில் நடக்கும் கதை. நிறைய உண்மையான விஷயங்களையும் கிரிக்கெட் மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். லால் சலாம் உலக சினிமா அளவுக்குச் சென்று சேரும் எனவும், நான் எந்த படம் நடித்தாலும் ரெட் ஜெயன்ட் தான் ரிலீஸ் பண்றாங்க.‌ எனக்கு சினிமாவில் 15 வருடம் ஆகி விட்டது. அதில் முக்கியமாக இருந்தவர்களில் ஒருவர் உதயநிதி ஸ்டாலின்.

கொஞ்ச நாட்களுக்கு முன் இந்தியா பெயர் மாற்றம் (பாரத்) குறித்து டுவீட் போட்டிருந்தேன். ஒரு இந்தியக் குடிமகனாக என் கருத்தை நான் சொன்னேன். எனக்கு அது தவறாகத் தெரியவில்லை. அதற்கு வந்த எதிர்ப்பு, அந்த இரண்டு நாட்களில் ஆன்டி இந்தியன், ஆன்டி ஹிந்து ஆகி விட்டேன்.

எனக்கு ஏன் இப்படி என்று புரியவில்லை, ஒரு பதிவு ஏன் இவ்வளவு எதிர்ப்பு என்று யோசித்தேன். மற்றவர்கள் கருத்தை மதிப்பு கொடுத்து விட்டுப் போக வேண்டும் என்பது தானே மனிதநேயம். நாம் ஒவ்வொருவருடைய கருத்துக்களுக்கும் வேறுபட்ட கருத்துக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும். லால் சலாம் அதைச் சரியாகச் செய்யும்" என கூறினார்.

அதன் தொடர்ச்சியாக நிகழ்ச்சி மேடையில் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசுகையில், "லால் சலாம் படத்தை பற்றி பேச நிறைய இருக்கிறது. விளையாட்டு வினையாக முடிந்தால் என்னவாகும் என்பது தான் படத்தின் கரு. லால் சலாம் படத்தின் இன்னொரு தலைப்பாக 'திசையெட்டும் பரவட்டும்' என இருந்தது.

இந்த படம் ரொம்ப கஷ்டப் பட்டு எடுத்த படம் தான். விளையாட்டில் நீ பெருசா நான் பெருசா என்று வந்தால் அப்போதுதான் போட்டி வருது. அந்த போட்டி பிசினஸ் ஆக மாறுகிறது, அந்த பிசினஸ் அரசியலாக மாறுகிறது, அந்த அரசியல் தான் வெறியாக மாறுகிறது, இது தான் லால் சலாம் படத்தின் கதை.

ஒவ்வொரு இடத்திலும் அரசியல் உள்ளது. இந்த படமும் கட்டாயம் ஒரு வித அரசியலைப் பேசுகிறது. உதய் அண்ணா பொதுவாகப் படம் பார்க்காமல் ரெட் ஜெயண்ட் பேரைப் பயன்படுத்த மாட்டார். ஆனால் படத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியைப் பார்த்து விட்டுப் படத்தை வாங்க ஒப்புக் கொண்டார். செந்தில் ஐயாவின் கதாபாத்திரம் தான் கதை, அவரின் கதாபாத்திரமாகவே வாழ்ந்தார்.

மூத்த நடிகர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று நேரம் தான். காட்சி இருக்கோ இல்லையோ சொன்ன நேரத்திற்கு அங்கு வந்து அமருவார் செந்தில் ஐயா, இதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

அப்பாவை பற்றி இப்போ பேச வேண்டானு நினைக்கிறேன். நான் இசை வெளியீட்டு விழாவில் பேசியதைச் சுட்டிக் காட்டி அப்பாவிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. நான் மேடையில் இதைத் தான் பேச உள்ளேன் என்பது கூட அவருக்குத் தெரியாது. ஆனால் அதற்கும் அவர் பதிலளித்து விட்டார்.

அந்த நேரத்தில் யாரோ ஒருவர் படம் ஓடுவதற்கு இது என்ன ஸ்டிராட்டர்ஜியா என்று கேட்டது போல இருந்தது. நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். படத்தில் அரசியல் பேசியோ, அவர் நம்பாததை நடிச்சோ, படம் ஓடவேண்டிய அவசியம் இல்லை. அதற்கு ஜெயிலர் படம் ஒரு உதாரணம். சொந்த கருத்தை ஆதரிக்கிற, சொந்த கருத்தை ஊக்குவிக்கும் மனுஷன் அவர்" என கூறினார்.

இதையும் படிங்க: கோவை திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்த ப்ளூ ஸ்டார் படக்குழுவினர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.