ETV Bharat / entertainment

'மின்மினி' படத்தின் இசைக்கு நல்ல வரவேற்பு.. முதல் படத்திலேயே கலக்கிய ரஹ்மான் மகள்! - Khatija rahman - KHATIJA RAHMAN

Khatija rahman: ஹலிதா ஷமீம் இயக்கத்தில் கதிஜா ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள ‘மின்மினி’ படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

மின்மினி பட போஸ்டர், கதீஜா ரஹ்மான் புகைப்படம்
மின்மினி பட போஸ்டர், கதீஜா ரஹ்மான் புகைப்படம் (Credits - @halithashameem X account, ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 8, 2024, 3:12 PM IST

சென்னை: இந்திய சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரஹ்மான் முதல் முறையாக இசையமைத்துள்ள படம் 'மின்மினி'. நாளை (ஆகஸ்ட் 9) வெளியாகும் மின்மினி படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்தவர்கள், தனது தந்தையை‌ போலவே இசை ஞானம் பெற்றுள்ள கதீஜா ரஹ்மான் பின்னணி இசை படத்திற்கு மிகப் பெரிய பலமாக உள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்களுக்கு சினிமா மற்றும் இசை ஆர்வலர்களுக்கு மிகச் சில திரைப்படங்கள் மட்டுமே சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும். அந்த வரிசையில் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள 'மின்மினி' திரைப்படம் அமைந்துள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் வெளியான 'எந்திரன்' படத்தில் இடம்பெற்ற 'புதிய மனிதா' பாடலில் கதீஜா ரஹ்மான் பாடகராக தனது மயக்கும் குரல் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இப்போது ஹலிதா ஷமீமின் 'மின்மினி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

மின்மினி படத்தில் கதீஜாவின் பின்னணி இசை மற்றும் மெலோடி பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுகுறித்து பேசிய இசையமைப்பாளர் கதீஜா ரஹ்மான், "இதுபோன்ற மனதிற்கு இதமான பாராட்டுக்களைக் கேட்பது எனக்கு மகிழ்ச்சியான அனுபவம். சரியான வழிகாட்டுதலுடன் எனது பலத்தை வளர்த்த என் குடும்பத்தினருக்கும், ஆசிரியர்களுக்கும் தான் எல்லாப் புகழும் சேரும். தமிழ்த் திரையுலகில் எனது இசைப் பயணத்தைத் தொடங்க ‘மின்மினி’ போன்ற ஒரு படம் எனக்குக் கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்தப் படத்தின் எமோஷன் மற்றும் சூழல் எனக்கு சிறந்த இசை அனுபவத்தைக் அளித்துள்ளது. இதயத்தைத் தொடும் நல்ல செய்தியுடன் சிறந்த இயக்கமும், ஒளிப்பதிவும் இருப்பது இந்தக் கதையின் பலம். இந்த வாய்ப்பைக் கொடுத்து, எனக்கு ஆதரவு அளித்து, நம்பிக்கையளித்த ஹலிதா ஷமீம், மனோஜ் பரமஹம்சா மற்றும் முரளி ஆகியோருக்கு எனது பணிவான நன்றிகள்" என்றார். 'மின்மினி' மூன்று பதின்ம வயதினரை சுற்றி நடக்கும் ஃபீல் குட் திரைப்படமாக உருவாக்கபட்டுள்ளது. முன்னதாக ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான சில்லு கருப்பட்டி, ஏலே ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: கல்கி 2898 AD முதல் ராயன் வரை... ஆகஸ்ட் மாதத்தில் ஓடிடி புது வரவுகள் என்ன? - August OTT releases

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.