ETV Bharat / entertainment

சூர்யா 44 படத்தை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது! - Suriya 44 - SURIYA 44

Suriya 44: சூர்யாவின் 44வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

surya 44
surya 44
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 28, 2024, 7:37 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர், நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் கடைசியாக 2022ஆம் ஆண்டு 'எதற்கும் துணிந்தவன்' படம் வெளியானது. அதற்கு பிறகு தற்போது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் 'கங்குவா' என்ற படத்தில் நடித்து வருகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் பீரியட் காலகட்டத்தில் நடப்பது போன்ற படமாக உருவாகி வருகிறது.

இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். பத்து மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து, சூர்யா தனது 43வது படமாக சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இதன் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில், சுதா கொங்கராவுடனான புறநானூறு திரைப்படத்திற்கு இன்னும் நேரம் தேவைப்படுகிறது என சில நாட்களுக்கு முன்பு நடிகர் சூர்யா தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது சூர்யாவின் 44வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரிப்பு நிறுவனமும், கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளது.

இது குறித்து சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இருவரும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்துள்ளனர். இது சூர்யா நடிக்கும் 44வது படமாகும். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் கடைசி படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குவார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், சூர்யாவின் படத்தை இயக்க உள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகி, சூர்யா ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. காதல் சிரிப்பு போர் (Love Laughter War) என டேக் லைன் வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ’தலைவர் 171’ டைட்டில் டீசர் எப்போது? - லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அப்டேட்! - Thalaivar 171 Title Teaser

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.