ETV Bharat / entertainment

கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமாரை நேரில் சந்தித்த கேஜிஎஃப் யாஷ்! - yash met shivaraj kumar - YASH MET SHIVARAJ KUMAR

Yash met Shivraj Kumar: பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் படப்பிடிப்பில் இருந்த போது நடிகர் யாஷ் அவரை நேரில் சந்தித்துள்ளார்.

சிவராஜ்குமாரை படப்பிடிப்பில் நேரில் சந்தித்த கேஜிஎஃப் யாஷ்
சிவராஜ்குமாரை படப்பிடிப்பில் நேரில் சந்தித்த கேஜிஎஃப் யாஷ் (Credits - ETV Bharat)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 19, 2024, 5:45 PM IST

பெங்களூரு: பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமாரை நடிகர் யாஷ் படப்பிடிப்பில் நேரில் சந்தித்துள்ளார். சிவராஜ்குமார் தற்போது தனது 131வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் கார்த்திக் அத்வைத் இயக்கி வருகிறார். மேலும், சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார். தீபு குமார் இப்படத்திற்கு படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், ரவி சந்தேஹக்ளு கலை இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

கார்த்திக் அத்வைத் விக்ரம் பிரபு, வாணி போஜன் நடித்த ‘பாயும் புலி நீ எனக்கு’ என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கேஜிஎஃப் படம் மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்ற நடிகரான யாஷ், சிவராஜ்குமாரை மரியாதை நிமித்தமாக படப்பிடிப்பில் நேரில் சந்தித்துள்ளார்.

சிவராஜ்குமார் தமிழ்நாட்டில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் மூலம் பிரபலமடைந்தார். மேலும், ஜெயிலர் 2 படத்தை நெல்சன் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அப்படத்திலும் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என தெரிகிறது.

யாஷ் தற்போது Toxic என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கீது மோகன்தாஸ் இயக்கி வருகிறார். மேலும், டாக்ஸிக் படத்தில் நயன்தாரா நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. கன்னட சினிமாவின் இரு உச்ச நடிகர்கள் நேரில் சந்தித்துக் கொண்டது அவர்களது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: "பெர்லின் டூ ராஜாக்கூர்"... சொந்த ஊரில் கொட்டுக்காளி படக்குழுவினரை கௌரவித்த சூரி! - soori honoured kottukkali team

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.