ETV Bharat / entertainment

சந்தானத்தின் 'இங்க நான் தான் கிங்கு'.. பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் கமல்ஹாசன்! - Inga Naan Thaan Kingu

Inga Naan Thaan Kingu: ஆனந்த் நாராயண் இயக்கத்தில், சந்தானம் நடிக்கும் இங்க நான் தான் கிங்கு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ளார்.

இங்க நான் தான் கிங்கு
இங்க நான் தான் கிங்கு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 28, 2024, 12:26 PM IST

Updated : Feb 28, 2024, 1:12 PM IST

சென்னை: G.N.அன்புச்செழியனின் கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனம், 'வெள்ளைக்கார துரை', 'தங்கமகன்' 'மருது', 'ஆண்டவன் கட்டளை', உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தைப் அந்நிறுவனம் தயாரிக்கிறது.

'இங்க நான் தான் கிங்கு' என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, நடிகர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ளார். இப்படத்தில் அனைத்து இளைஞர்களும் ரசித்து கொண்டாடும் விதமாக சந்தானத்தின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

ஆனந்த் நாராயண் இயக்கும் இப்படத்தில், சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும், மறைந்த நடிகர் மனோபாலாவும் நடித்துள்ளனர். இவர்களுடன் முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

எழிச்சூர் அரவிந்தன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல் வரிகளை, இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் எழுதியுள்ளனர். இங்க நான் தான் கிங்கு படத்திற்கு, ஓம் நாராயண் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், எம்.தியாகராஜன் படத்தொகுப்பு செய்துள்ளார். கல்யாண், பாபா பாஸ்கர் ஆகியோர் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் நடத்தப்பட்டது.

இத்திரைப்படம் 2024 கோடை விடுமுறைக்கு திரையரங்குகளில் வெளியாகிறது. சந்தானம் நடிப்பில் கடந்தாண்டு டிடி ரிட்டர்ன்ஸ் படமும் இந்த ஆண்டு வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படமும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அந்த வரிசையில் இந்த படமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பான் இந்தியா படத்துக்காக இந்தி தயாரிப்பாளருடன் கை கோர்க்கும் ரஜினி!

Last Updated : Feb 28, 2024, 1:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.