ETV Bharat / entertainment

Manorathangal; கமல், மம்முட்டி, மோகன்லால் நடிப்பில் மனோதரங்கள் ஆந்தாலஜி ட்ரெய்லர் வெளியானது! - Manorathangal Trailer released - MANORATHANGAL TRAILER RELEASED

Manorathangal Trailer: மலையாள சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள மனோதரங்கள் ஆந்தாலஜி படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

மனோதரங்கள் போஸ்டர்
மனோதரங்கள் போஸ்டர் (Credits - Mammootty X Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 16, 2024, 8:04 PM IST

ஹைதராபாத்: மலையாளத்தின் மூத்த எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் இயக்குநர் எம்.டி.வாசுதேவன் நாயரைக் கொண்டாடும் விதமாக 'மனோதரங்கள்' ஆந்தாலஜி படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 9 படங்கள் இடம்பெற்றுள்ளன.

அதில், 'ஒல்லவும் தீரவும்' என்ற படத்தை இயக்குநர் பிரியதர்ஷன், 'கடு கண்ணவ ஒரு யாத்திரா' படத்தை இயக்குநர் ரஞ்சித், 'கல்சா' படத்தை இயக்குநர் ஷ்யாம் பிரசாத், 'ஷிலாலிகாதம்' படத்தை பிரியதர்ஷன், 'வில்பனா' படத்தை அஸ்வதி வி.நாயர், 'ஷெர்லாக்' படத்தை மகேஷ் நாராயணன் இயக்கி உள்ளனர்.

இந்த ஆந்தாலஜியில் மம்மூட்டி, மோகன்லால், ஃபகத் பாசில், கமல்ஹாசன், பார்வதி திருவொத்து, நதியா, ஹரீஷ் உத்தமன், பிஜூ மோகன், ஆசிஃப் அலி, இந்திரன்ஸ், நெடுமூடி வேணு, சித்திக், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.

இந்த மனோதரங்கள் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. கமல்ஹாசன் இன்ட்ரோவுடன் ட்ரெய்லர் தொடங்குகிறது. மம்மூட்டி, மோகன்லால் கதைகள் அடுத்தடுத்து காட்டப்படுகின்றன. இந்த ட்ரெய்லரில் ஒவ்வொரு நடிகர்களின் அழுத்தமான உணர்வுகள் மிக நெருக்கமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இப்படம் வரும் ஆக.15-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இதையும் படிங்க: 4 நாளில் இந்தியன் 2 வசூல் இவ்வளவா? நெகடிவ் விமர்சனங்களை தூக்கி சாப்பிட்ட இந்தியன் தாத்தா? - Indian 2 Box Office Collection

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.