ETV Bharat / entertainment

kalki 2898 AD படத்தில் பிரபாஸுடன் கலக்கப் போகும் புஜ்ஜி ரோபோ வீடியோ வெளியீடு! - kalki 2898 AD bujji promo

kalki 2898 AD bujji promo: ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்ற kalki 2898 AD படத்தின் புஜ்ஜி என்கிற ரோபோ கேரக்டர் அறிமுக விழாவில் நடிகர் பிரபாஸ் பங்கேற்றார்.

kalki 2898 AD movie poster and prabhas image
kalki 2898 AD திரைப்பட போஸ்டர் மற்றும் பிரபாஸ் புகைப்படம் (Credits - ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 23, 2024, 2:11 PM IST

ஹைதராபாத்: நடிகையர் திலகம் படம் மூலம் பிரபலமடைந்த இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘kalki 2898 AD’ சயின்ஸ் பிக்‌ஷன் கதையில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் ஜூன் 27ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

பிரபாஸின் கதாபாத்திரமான பைரவாவுடன், புஜ்ஜி என்கிற ரோபோவை மையமாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள்து. மேலும் அந்த ரோபோவிற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் டப்பிங் குரல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் படக்குழு தற்போது ப்ரமோஷனில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. நேற்று ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்ற ‘kalki 2898 AD’ விளம்பர நிகழ்ச்சியில் படத்தின் 'புஜ்ஜி' கதாபாத்திரத்தின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படத்தின் கதாநாயகன் பிரபாஸ் பங்கேற்றார்.

அப்போது விழாவில் பேசிய பிரபாஸ், “இந்த படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரது நடிப்பு இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருடன் நடித்த நான் மிகப் பெரிய அதிர்ஷ்டசாலி.

நான் சிறுவனாக இருந்த போது, சாகரசங்கம் படத்தை பார்த்து, அதில் கமல் சார் அணிந்திருந்த உடையை போன்று எனக்கு வேண்டும் என எனது தாயாரிடம் கேட்டுள்ளேன். மேலும் இந்த படத்தில் மற்றொரு அழகான நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ளார். அவருடன் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது” எனக் கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இணையத்தில் புஜ்ஜி அறிமுக வீடியோவை பார்த்த ரசிகர்கள், “இது வேற லெவல், இந்த முறை pan india அல்ல, pan world திரைப்படம்” எனக் பாராட்டி வருகின்றனர். நேற்று புஜ்ஜி கேரக்டர் அறிமுக நிகழ்ச்சியில் ராமோஜி ஃபிலிம் சிட்டி நிர்வாக மேலாளர் விஜயேஷ்வரி, தயாரிப்பாளர்கள் சுவப்னா தத், ப்ரியங்கா தத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாருக்கான்.. தற்போதைய நிலை என்ன? - Shah Rukh Khan In Hospital

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.