ETV Bharat / entertainment

நீ என்ன அவ்ளோ பிஸி ஆகிட்டியா? - அசோக் செல்வனை சாடிய கே.ராஜன்! - K Rajan scolded actor Ashok Selvan - K RAJAN SCOLDED ACTOR ASHOK SELVAN

K.Rajan scolded actor Ashok Selvan: எமக்குத் தொழில் Romance படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்காத நடிகர் அசோக் செல்வனை நீ என்ன அவ்ளோ பிஸி ஆகிட்டியா?, நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா? என கே.ராஜன் கடுமையாக சாடினார்.

கே.ராஜன்
கே.ராஜன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jul 27, 2024, 4:59 PM IST

சென்னை: பாலாஜி கேசவன் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன், அவந்திகா நடித்துள்ள எமக்குத் தொழில் ரொமான்ஸ் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, கே.ராஜன், டி.சிவா, எழில், இசை அமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்த நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகை அவந்திகா இருவரும் கலந்து கொள்ளவில்லை.

கே.ராஜன் பேச்சு (Credits - ETV Bharat Tamil Nadu)

நிகழ்ச்சி மேடையில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், “தமிழில் டைட்டில் வைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கும் காலத்தில் நிறைய டைட்டில் ஆங்கிலத்தில் வருகிறது. ஆனால், இந்த படத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலுமே வைத்துள்ளார்கள்.

இந்த புரமோஷனுக்கு கூட ஹீரோ, ஹீரோயின் வரவில்லை என்று தயாரிப்பாளர் திருமலை தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். சங்கங்கள் சார்பில் சில திட்டங்களை போட்டாலும் அதை மீறுபவர்கள் ஹீரோ, ஹீரோயின். டப்பிங் பேசுவதற்கு முன் பணம் வேண்டும் என்றால் அசிங்கமாக இல்லையா? உன்னை வைத்து படம் எடுக்கிறோம். நம்பிக்கை இல்லையா? ரிலீஸுக்கு பண கஷ்டம் இருந்தால் அந்த நடிகர் கொடுத்து உதவ முன் வர வேண்டும். சரத்குமார், ஜெய்சங்கர் போன்றவர்கள் உதவி செய்தாங்க.

ஆனால், இவர் (அசோக் செல்வன்) புரமோஷனுக்கே வரவில்லை என்றால் தயாரிப்பாளர்கள் அடிமையா? நீ என்ன அவ்ளோ பிஸி ஆகிட்டியா? ஒரு இயக்குநர் இல்லை என்றால் ஒரு ஹீரோ, ஹீரோயின் இல்லை. யாராக இருந்தாலும் தலைக்கணம் இருக்கக் கூடாது. நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா?

ஒரு ஹீரோயினை இந்தியில் தேடி தமிழில் கொண்டு வந்து போடுறாங்க. பாம்பேயில் வீட்டிலிருந்து விமான நிலையம் வரை நான்கு பவுன்சர், பிறகு சென்னையில் நான்கு பவுன்சர் கொண்டு வந்து விட வேண்டும். நீ என்ன அவ்வளவு பெரிய தீவிரவாதியா? நான் பவுன்சர்களை குறை சொல்லவில்லை.

ஹீரோ ஷூட்டிங் போய் விட்டு கேரவனுக்குள் வருகிற வரைக்கும் பவுன்சர் இருக்க வேண்டும். என்னங்கடா இது அக்கிரமமா இருக்கு? ரொம்ப வேதனையாக இருக்கிறது. அப்படிப்பட்ட ஹீரோ வேண்டாம் என்று சொல்வதற்கு தைரியம் இல்லை. சில கஷ்டங்களை தயாரிப்பாளர்களுக்கு செயற்கையாக கொடுக்கிறார்கள். இதற்கு தயாரிப்பாளர் சங்கம் தான் முடிவெடுக்க வேண்டும். தயாரிப்பாளர் சங்கம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

ஆந்திராவில் ஒரு வில்லன் நடிகருக்கும், ஒரு நடிகைக்கும் தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு கொடுத்தாங்க. (பணத்தை வாங்கிட்டு ஷூட்டிங் வரவில்லை என்று) அடுத்து யாரும் கூப்பிடல. பிறகு அபராதம் செலுத்திய பிறகு தான் நடிக்க ஆரம்பித்தாங்க. அவர்கள் வேறு யாருமில்லை. பிரகாஷ் ராஜ், சிம்ரன் தான் (அப்போது) தனிப்பட்ட முறையில் யாரையும் சொல்லவில்லை. தயாரிப்பாளரை வேதனைப்படுத்திய ஹீரோ யாராக இருந்தாலும் அவர்களை கண்டிக்கிறேன்” என்று கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: 90 சதவீதம் லாபம் பெறும் நடிகர்கள் ஏன் புரோமஷனுக்கு வருவதில்லை? ஆர்.கே.செல்வமணி விளாசல்! - RK Selvamani About movie promotion

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.