ETV Bharat / entertainment

'பயம்னா என்னணு தெரியணும்னா தேவரா கதையை கேட்கணும்'.. வெளியானது தேவரா -1 ட்ரெய்லர்! - devara 1 trailer out now - DEVARA 1 TRAILER OUT NOW

இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகி உள்ள 'தேவரா 1' திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி உள்ளது.

தேவரா 1 போஸ்டர்கள்
தேவரா 1 போஸ்டர்கள் (Credits - Jr NTR X Page)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 22, 2024, 6:16 PM IST

சென்னை : இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர், பிரகாஷ்ராஜ், நடிகை ஜான்வி கபூர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘தேவரா 1’ படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பான் இந்தியா படமாக வரும் செப் 27ம் தேதி வெளியாகிறது. இப்படம் ஜூனியர் என்.டி.ஆருக்கு 30வது படமாகும்.

யுவசுதா புரோடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் புகைப்பட இயக்குநராக ரத்னவேலு, விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர் யகுந்தர், புரோடக்சன் டிசைனர் சபு சிரில், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் பணியாற்றி உள்ளனர். இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : நடிகை ஸ்ரீ தேவி மகளா இது! தேவரா படம் குறித்து தமிழில் பேசி அசத்திய ஜான்வி! - Janhvi Kapoor in tamil

அந்த ட்ரெய்லரில், நேத்து ராத்திரி ஒரு கெட்ட கனவு வந்துச்சு என்ற டயலாக்வுடன் ட்ரெய்லர் தொடங்குகிறது. ரத்தம் கலந்த செங்கடல் போன்ற காட்சிகளுடன் மூவ் ஆகிறது. 'பயம்னா என்னனு தெரியணும்னா தேவரா கதையை கேட்கனும்' என்ற மாஸான டயலாக் ட்ரெய்லரில் இடம்பெறுகிறது. தற்போது இந்த ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்று வருகிறது. முன்னதாக இப்படத்திலிருந்து பாடல் மற்றும், முதல் ட்ரெய்லர் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.