ETV Bharat / entertainment

ராம் சரண் பிறந்த நாள் ஸ்பெஷல்..! 'ஜரகண்டி ஜரகண்டி'.. கேம் சேஞ்சர் படத்தின் முதல் பாடல் வெளியீடு - jaragandi released song - JARAGANDI RELEASED SONG

HBD Ram Charan Jaragandi song: சங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் பாடலின் 'ஜரகண்டி ஜரகண்டி' பாடல் வரிகளை வீடியோவை ராம் சரணின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது.

GAME CHANGER
GAME CHANGER
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 27, 2024, 1:51 PM IST

சென்னை: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ராம் சரண், 'மாவீரன், ஆர்ஆர்ஆர்' போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தற்போது தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' (Game Changer) என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ளார். இதில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், சுனில், ஸ்ரீகாந்த், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் இப்டத்தில் நடித்து வருகின்றனர்.

ராம் சரண் பிறந்த நாள்; 'ஜரகண்டி ஜரகண்டி' பாடல் வெளியீடு: இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) நடிகர் ராம் சரணின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்து சொல்லும் விதமாக, படக்குழு இப்படத்தில் இருந்து முதல் பாடலை வெளியிட்டுள்ளது. 'ஜரகண்டி ஜரகண்டி' என்ற வரிகளுடன் வெளியாகியுள்ள இந்த பாடலுக்கு தமன் இசை அமைத்துள்ளார்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இந்த பாடல் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது. இதில், தமிழ் பாடலுக்கான வரிகளை விவேக் எழுதியுள்ளார். தலேர் மெகந்தி, பூஜா வெங்கட் ஆகியோர் இணைந்து இப்பாடலைப் பாடியுள்ளனர். இதற்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார்.

ஒரு பாடலுக்கு ரூ.90 கோடி செலவு: இயக்குநர் சங்கர் படைப்புகள் அமைத்தும் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கப்படும் என நம்மில் பலரும் அறிந்ததே. அதேபோல், இந்த பாடலுக்கு பிரம்மாண்டமான முறையில் கலர்புஃல் செட் பின்னணியில் நூற்றுக்கணக்கான குரூப் டான்சர்கள் நடனம் ஆடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த பாடல் காட்சிகளுக்கு மட்டும் ரூ.90 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த பாடல் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 'வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்' தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

'கேம் சேஞ்சர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது முதல் படக்குழு பல்வேறு தடைகளை சந்தித்து வந்தது. இந்த நிலையில் இத்திரைப்படம் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், கமல்ஹாசன் நடிப்பில் 'இந்தியன் 2' படத்தின் பணிகளுக்கு மத்தியில் இயக்குநர் சங்கர் 'கேம் சேஞ்சர்' படத்தை இயக்கியுள்ளதால் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: “வெள்ளிக்கிழமை நாயகன்” பட்டத்தை பெறுகிறாரா ஜி.வி.பிரகாஷ்? - Friday Hero Gv Prakash

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.