ETV Bharat / entertainment

மஃப்டி இயக்குநர் இயக்கத்தில் சூர்யா?.. வெளியான மாஸ் அப்டேட்! - Suriya to collaborate with narthan - SURIYA TO COLLABORATE WITH NARTHAN

Suriya: கன்னட இயக்குநர் நார்தன் இயக்கத்தில் நடிகர் சூர்யா புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சூர்யா
சூர்யா (Credits - IANS)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 21, 2024, 7:56 PM IST

ஹைதராபாத்: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் சூர்யா. இவர் தற்போது இயக்குநர் சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகும் இப்படம் வரும் அக்.10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்திலிருந்து முதல் பாடல் ஏற்கனவே வெளியான நிலையில், மேலும் ஒரு பாடலை படக்குழு வருகிற 23ஆம் தேதி வெளியிடுகிறது. மேலும், சூர்யா 44 படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டதாக கடந்த ஜூன் 2ஆம் தேதி அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், கன்னட இயக்குநர் நார்தன் இயக்கத்தில் சூர்யா படம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் தற்போது பைரதி ரணங்கல் படத்தின் ரிலீஸில் பிஸியாக உள்ளார். நார்தன் சமீபத்தில் சூர்யாவிடம் ஒரு கதையை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும், நார்தன் - சூர்யா காம்போவில் உருவாகும் படத்தை KVN புரோடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் படக்குழு தரப்பில் இருந்தோ அல்லது சூர்யா தரப்பில் இருந்தோ இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சூர்யா 43 படத்தை சூரரைப்போற்று இயக்குநர் சுதா கொங்கரா இயக்குகிறார் என்ற அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதம் வெளியானது. மேலும், இப்படத்தின் முதல் பாடல் பாடகர் தீ குரலில் உருவாக இருப்பதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் அறிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: கல்கி 2898 AD படத்திற்கு புது சிக்கல்.. வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய கோயில் நிர்வாகி! - KALKI 2898 AD MOVIE CASE

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.