திருவனந்தபுரம்: மலையாள சினிமாவின் பிரபல நடிகர் இந்திரன், இன்று எழுத்தறிவு இயக்கத்தின் 7ஆம் வகுப்பு தேர்வினை எழுதினார். இவர் திருவனந்தபுரம், அட்டகுளங்கரா பகுதியில் உள்ள மத்திய பள்ளியில் 7ஆம் வகுப்பு தேர்வெழுதினார். தேர்வெழுதிய பின் தனது நண்பர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.
இவர் படங்களில் பிஸியான போதும், ஆன்லைன் வகுப்புகளில் தொடர்ந்து கலந்து கொண்டு தேர்வுக்கு தயாரானார். திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரிக்கு அருகில் உள்ள சர்க்கார் மேல்நிலைப் பள்ளிதான் இந்திரனின் படிப்பு மையம். முன்னதாக, இவர் 10ஆம் வகுப்பு சமத்துவத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். தற்போது 7ஆம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வெழுதி வருகிறார்.
அக்ஷர்ஸ்ரீ மிஷனின் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி களப்பணியாளரான ஆசிரியை விஜயலட்சுமி தான் இந்திரனை தேர்வுக்கு தயார் செய்தார். இந்திரனுக்கு வீட்டிலேயே டியூசன் எடுத்தார். இந்த தேர்வு முடிவுகள் இரண்டு வாரங்களில் வெளியாகும்.
மேலும், இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேரடியாக 10ஆம் வகுப்பு சமத்துவப் படிப்பில் சேரலாம். ஏழாம் வகுப்புக்கு பின் 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றால், எழுத்தறிவு இயக்கத்தின் தூதராக நியமிக்க பரிந்துரைக்கப்படும் என எழுத்தறிவு இயக்க இயக்குனர் ஏ.ஜி.ஒலினா தெரிவித்தார். மேலும், நடிகரின் கல்வி ஆர்வம் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டு என்று ஒலேனா கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : கூலி அப்டேட் கொடுத்த உபேந்திரா.. திடீர் பின்வாங்கலுக்கு காரணம் என்ன? - Coolie movie update