ETV Bharat / entertainment

ஹார்ட் பீட் வெப் சீரிஸ் தீம் பாடலை வெளியிட்டது ஹாட்ஸ்டார் நிறுவனம்..! - Heartbeat song

Heartbeat web series theme song released: இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அடுத்ததாக வெளியிடவுள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “ஹார்ட் பீட்” சீரிஸிலிருந்து “ஹார்ட் பீட் பாட்டு” எனும் பெப்பியான பாடலை வெளியிட்டுள்ளது.

Heartbeat web series theme song released
ஹார்ட் பீட் வெப் சீரிஸ் தீம் பாடலை வெளியிட்டது ஹாட்ஸ்டார் நிறுவனம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 1, 2024, 2:31 PM IST

சென்னை: இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அடுத்ததாக வெளியிடவுள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “ஹார்ட் பீட்” சீரிஸிலிருந்து “ஹார்ட் பீட் பாட்டு” எனும் பெப்பியான பாடலை வெளியிட்டுள்ளது.

தற்போது 'ஹார்ட் பீட்' என்ற இணையத் தொடரை, இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்குகிறார். இந்த சீரிஸ்ஸை A Tele Factory நிறுவனம் தயாரிக்கிறது. இந்த சீரிஸ்க்கு சரண் ராகவன் இசையமைக்கிறார். விக்னேஷ் அர்ஜுன் எடிட்டிங் பணிகளைச் செய்கிறார். மேலும் சூப்பர் சுப்பு எழுத்தில், மேட்லி ப்ளூஸ் இசையமைத்துள்ள இந்த பாடல், 'ஹார்ட் பீட்' சீரிஸின் சாரத்தையும் அதன் ஆன்மாவையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

'ஹார்ட் பீட்' சீரிஸ் ரசிகர்களைக் கவரும் வகையில் நட்பு, ரொமான்ஸ், காமெடி என அனைத்தும் கலந்த பொழுதுபோக்கு சீரிஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரிஸில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோக லட்சுமி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மண், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியான்ஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த சீரிஸ் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹாஸ்டாரில் சமீபத்தில் வெளியான லேபில் வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில், ஜெய் நடித்து வெளியான இந்த சீரிஸ் வடசென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இணைய தொடராகும். மேலும் மத்தகம், மை 3 ஆகிய இணைய தொடர்களும் கடந்தாண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பல்வேறு எதிர்பார்ப்புகளை குவித்து வரும் நரேனின் “ஆத்மா” படம்! எப்போது ரிலீஸ்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.