ETV Bharat / entertainment

"இந்திய சினிமாவே தங்கலானுக்காக தயாராக இரு" - தங்கலான் பற்றி ஜிவி பிரகாஷ் கூறிய சூப்பர் அப்டேட்! - GV PRAKASH ON THANGALAAN - GV PRAKASH ON THANGALAAN

GV Prakash on Thangalaan Movie Update: விக்ரம் நடித்துள்ள தங்கலான் பட டிரெய்லர் விரைவில் வெளியாக உள்ளதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

தங்கலான் போஸ்டர், ஜிவி பிரகாஷ்
தங்கலான் போஸ்டர், ஜிவி பிரகாஷ் (Credits - Vikram and GV Prakash X page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 1, 2024, 1:38 PM IST

சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மாறுபட்ட புதிய தோற்றத்தில் நடித்து வரும் திரைப்படம் 'தங்கலான்'. விரைவில் திரைக்கு வர உள்ள இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் பசுபதி, பார்வதி, ஹரி கிருஷ்ணன், இங்கிலாந்து நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் (Studio Green) ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இப்படம் 1900-களில் கோலார் தங்க வயல் (KGF - Kolar Gold Field) பகுதியில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கை பற்றியதாக உருவாகி வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்தியா படமாகவும் வெளியாகிறது. இப்படம் தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இப்படத்தின் க்ளிம்ஸ் மற்றும் டீசர் காட்சிகள் வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ள நிலையில், படத்தின் அனைத்து பின்னணி இசைப் பணிகளும் நிறைவடைந்ததாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: புதுமுகங்களுடன் களமிறங்கும் கே.எஸ்.ரவிக்குமார்.. 'யூ ஆர் நெக்ஸ்ட்' படம் பூஜையுடன் தொடக்கம்! - YOU ARE NEXT MOVIE

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில், “தங்கலான் படத்தின் இசையமைப்பு முடிவடைந்தது. இப்படத்திற்காக தன்னுடைய தலைச் சிறந்த இசையை வழங்கி உள்ளேன். தங்கலான் படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். ஒரு அற்புதமான டிரெய்லர் விரைவில் வெளியாக போகிறது. தங்கலான் படத்திற்காக இந்திய சினிமா தயாராக இரு” என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: வசூல் மழையில் கல்கி 2898 ஏடி ...மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? - KALKI 2898 AD BOX OFFICE

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.