ETV Bharat / entertainment

துணி கேட்ட விவசாயி மகன்.. ரூ.6 ஆயிரம் அனுப்பிய ஜி.வி.பிரகாஷ்! - ஜி வி பிரகாஷ் பண உதவி

GV Prakash: சமூக வலைத்தளம் மூலம் உதவி கேட்ட விவசாயி மகனுக்கு 6 ஆயிரம் பணம் அனுப்பி, இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் உதவி செய்த நிகழ்வை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 3, 2024, 7:44 PM IST

சென்னை: தென்னிந்திய திரைத்துறையில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வரும் ஜி.வி.பிரகாஷ், அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் சில கருத்துகளை பகிர்ந்து வருவார். அதேபோல், உதவி கேட்பவருக்கு தன்னால் முடிந்த நிதி உதவிகளை செய்து வருகிறார்.

அப்படி, எக்ஸ் தளத்தில் மெர்சல் குமார் என்றவர் தனது கணக்கிலிருந்து, விவசாயி வீட்டைச் சேர்ந்தவன் என அறிமுகப்படுத்திக் கொண்டவர், தனக்கும், தன் தந்தைக்கும் உடுத்த உடை வேண்டும் என நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷிடம் குறுஞ்செய்தி மூலம் கேட்டுk கொண்டுள்ளார்.

இதனைப் பார்த்த ஜி.வி.பிரகாஷ், மெர்சல் குமார் என்ற அவரது கூகுள் பே எண்-ஐக் கேட்டு, அவரது வங்கிக் கணக்கிற்கு 6 ஆயிரம் ரூபாயை அனுப்பி வைத்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்த மெர்சல் குமார், ஜி.வி.பிரகாஷ் உடனான கலந்துரையாடல் பதிவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இதனை அறிந்த பலரும், நடிகர் ஜி.வி.பிரகாஷை பாராட்டி வருகின்றனர்.

முன்னதாக, கடந்த ஆண்டு, குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு பணம் வேண்டும் என சமூக வலைத்தளத்தில் உதவி கேட்ட நபருக்கு, நடிகர் ஜி.வி.பிரகாஷ் 75 ஆயிரம் ரூபாய் பண உதவி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: என்னால் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியவில்லை.. நடிகர் கார்த்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.